• Nov 17 2024

மட்டக்களப்பு , மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் - கர்நாடக சங்கீதப்போட்டியில் சாதனை !

Tharmini / Nov 10th 2024, 3:16 pm
image

அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

நேற்று (09) திருகோணமலையில் நடைபெற்ற அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியின் தேசிய மட்டப் போட்டியில் திறந்த குழு இசை மற்றும் இரண்டு தனியிசை போட்டிகளில் பங்குபற்றியிருந்தது.

மாவட்ட, மாகாண மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்று இந்த தேசிய போட்டியில் மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னாள் சங்கீத ஆசிரியை தேனக இசைச்சுடர் திருமதி சாந்தினி தர்மநாதனின் பயிற்றுவிப்பில் இந்த மாணவர்கள் போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர்.

இதனடிப்படையில் அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியில் குழு இசை தேசியத்தில் முதல் இடத்தினையும் ஜாவளி தனியிசையில் இரண்டாம் இடத்தினையும் திருப்புகழ் தனியிசையில்  மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.

சாதனை படைத்த மாணவர்களையும் வழிகாட்டிய ஆசிரியரையும் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது. பெற்றோர் மற்றும் உறவினர்களினால் மாணவர்களும் ஆசிரியரும் கௌரவிக்கப்பட்டதுடன் தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர்.




மட்டக்களப்பு , மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் - கர்நாடக சங்கீதப்போட்டியில் சாதனை அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.நேற்று (09) திருகோணமலையில் நடைபெற்ற அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியின் தேசிய மட்டப் போட்டியில் திறந்த குழு இசை மற்றும் இரண்டு தனியிசை போட்டிகளில் பங்குபற்றியிருந்தது.மாவட்ட, மாகாண மட்டத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்று இந்த தேசிய போட்டியில் மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னாள் சங்கீத ஆசிரியை தேனக இசைச்சுடர் திருமதி சாந்தினி தர்மநாதனின் பயிற்றுவிப்பில் இந்த மாணவர்கள் போட்டிகளில் பங்குபற்றியிருந்தனர்.இதனடிப்படையில் அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியில் குழு இசை தேசியத்தில் முதல் இடத்தினையும் ஜாவளி தனியிசையில் இரண்டாம் இடத்தினையும் திருப்புகழ் தனியிசையில்  மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.சாதனை படைத்த மாணவர்களையும் வழிகாட்டிய ஆசிரியரையும் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது. பெற்றோர் மற்றும் உறவினர்களினால் மாணவர்களும் ஆசிரியரும் கௌரவிக்கப்பட்டதுடன் தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement