• May 03 2024

கடற்தொழிலாளர்களின் வாக்கு வங்கிக்காக கச்சதீவை மீட்டு தருவோம் என சாவல் விடுகின்றனர்- சுப்பிரமணியம் தெரிவிப்பு..!!

Tamil nila / Apr 13th 2024, 10:04 pm
image

Advertisement

தேர்தலில் தமிழக கடற்தொழிலாளர்களின் வாக்கு வங்கியை இலக்கு வைத்தே கச்ச தீவை மீட்டு தருகிறோம் என அரசியல்வாதிகள் பிரச்சாரங்களில் சவால் விட்டு வருகின்றனர் என வட மாகாண மீனவர் இணையத்தின் தலைவர் என்.வி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

இழுவைமடி தொழிலை தடை செய்ய வேண்டும், இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக நாங்கள் போராடி வருகின்றோம்.

எமது போராட்டங்களுக்கு தீர்வுகள் கிடைக்காத நிலையில் கச்ச தீவு தொடர்பில் இந்தியாவில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. கச்ச தீவு எங்களுடையது. 

அது இலங்கைக்கு கச்சதீவு சொந்தமானது தெரிந்ததும் கச்ச தீவை தாம் கொடுத்ததாக கூறி தற்போது தேர்தலை இலக்கு வைத்து பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கச்ச தீவு கடலை அண்டிய பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்தமையால், தமிழக கடற்தொழிலாளர்கள் கோவம் கொண்டிருந்தனர். அவ்வேளை அவர்களின் கோவத்தை கட்டுப்படுத்தவே, கச்சதீவில் தமிழக கடற்தொழிலாளர்கள் தமது வலைகளை உலர்த்தவும் , ஓய்வு எடுக்கவும் அனுமதிக்குமாறு  இந்திய மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுக்களை நடாத்தி அதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டனர் 

நேரு காலத்தில் நேரு கூறி இருந்தார், கச்சதீவு ஒரு சிறிய தீவு.   அதுபற்றி நாம் நாடாளுமன்றில் பேச வேண்டிய அவசியமில்லை என அப்பவே கச்ச தீவை பற்றி பேசுவதை கைவிட்டு இருந்தனர். 

ஆனால் இப்போது கச்சதீவு பேசு பொருளாக மாறியுள்ளது. கச்ச தீவை மீட்டு தருவோம் என தேர்தலுக்காக சாவல். விடுகின்றனர்.

மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் தெரியும் கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என. தமிழகத்தின் குறிப்பாக இராமேஸ்வர பகுதிகளை அண்டிய பகுதியில் உள்ள கடற்தொழிலாளர்களின் வாக்கு வங்கிக்காக அது பற்றி பேசிகின்றார்கள்.

கச்சதீவை மீட்டால் மீனவர்கள் பிரச்சனை தீரும் என்கிறார்கள். ஆனால் பிரச்சனை அவர்களின் அடிமடி இழுவை படகுகளும்,  இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவதுமே. அதனை தடுத்து நிறுத்தினால் தான் பிரச்சனை தீருமே தவிர , கச்ச தீவை மீட்பதால் பிரச்சனை தீராது என தெரிவித்தார்.

கடற்தொழிலாளர்களின் வாக்கு வங்கிக்காக கச்சதீவை மீட்டு தருவோம் என சாவல் விடுகின்றனர்- சுப்பிரமணியம் தெரிவிப்பு. தேர்தலில் தமிழக கடற்தொழிலாளர்களின் வாக்கு வங்கியை இலக்கு வைத்தே கச்ச தீவை மீட்டு தருகிறோம் என அரசியல்வாதிகள் பிரச்சாரங்களில் சவால் விட்டு வருகின்றனர் என வட மாகாண மீனவர் இணையத்தின் தலைவர் என்.வி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். இழுவைமடி தொழிலை தடை செய்ய வேண்டும், இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக நாங்கள் போராடி வருகின்றோம்.எமது போராட்டங்களுக்கு தீர்வுகள் கிடைக்காத நிலையில் கச்ச தீவு தொடர்பில் இந்தியாவில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. கச்ச தீவு எங்களுடையது. அது இலங்கைக்கு கச்சதீவு சொந்தமானது தெரிந்ததும் கச்ச தீவை தாம் கொடுத்ததாக கூறி தற்போது தேர்தலை இலக்கு வைத்து பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கச்ச தீவு கடலை அண்டிய பகுதிகளில் மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்தமையால், தமிழக கடற்தொழிலாளர்கள் கோவம் கொண்டிருந்தனர். அவ்வேளை அவர்களின் கோவத்தை கட்டுப்படுத்தவே, கச்சதீவில் தமிழக கடற்தொழிலாளர்கள் தமது வலைகளை உலர்த்தவும் , ஓய்வு எடுக்கவும் அனுமதிக்குமாறு  இந்திய மத்திய அரசு இலங்கை அரசுடன் பேச்சுக்களை நடாத்தி அதற்கான அனுமதியை பெற்றுக்கொண்டனர் நேரு காலத்தில் நேரு கூறி இருந்தார், கச்சதீவு ஒரு சிறிய தீவு.   அதுபற்றி நாம் நாடாளுமன்றில் பேச வேண்டிய அவசியமில்லை என அப்பவே கச்ச தீவை பற்றி பேசுவதை கைவிட்டு இருந்தனர். ஆனால் இப்போது கச்சதீவு பேசு பொருளாக மாறியுள்ளது. கச்ச தீவை மீட்டு தருவோம் என தேர்தலுக்காக சாவல். விடுகின்றனர்.மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் தெரியும் கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என. தமிழகத்தின் குறிப்பாக இராமேஸ்வர பகுதிகளை அண்டிய பகுதியில் உள்ள கடற்தொழிலாளர்களின் வாக்கு வங்கிக்காக அது பற்றி பேசிகின்றார்கள்.கச்சதீவை மீட்டால் மீனவர்கள் பிரச்சனை தீரும் என்கிறார்கள். ஆனால் பிரச்சனை அவர்களின் அடிமடி இழுவை படகுகளும்,  இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைவதுமே. அதனை தடுத்து நிறுத்தினால் தான் பிரச்சனை தீருமே தவிர , கச்ச தீவை மீட்பதால் பிரச்சனை தீராது என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement