• May 19 2024

இலங்கையில் வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்..! - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை samugammedia

Chithra / Apr 30th 2023, 4:12 pm
image

Advertisement

நாட்டில் நிலவும் தற்போதைய மழையுடனான வானிலை அடுத்த மூன்று நாட்களில் குறையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.

இதேவேளை, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல, கேகாலை மாவட்டத்தின் கேகாலை பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் கண்டி மாவட்டத்தில் உடபலாத்த ஆகிய பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்த பிரதேச செயலகப் பிரிவுகளின் மலைகள், சரிவுகள் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.


இலங்கையில் வானிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம். - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை samugammedia நாட்டில் நிலவும் தற்போதைய மழையுடனான வானிலை அடுத்த மூன்று நாட்களில் குறையலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்.இதேவேளை, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல, கேகாலை மாவட்டத்தின் கேகாலை பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் கண்டி மாவட்டத்தில் உடபலாத்த ஆகிய பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அந்த பிரதேச செயலகப் பிரிவுகளின் மலைகள், சரிவுகள் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement