• May 19 2024

மாணவர்களுக்கிடையே கடும் மோதல் - கூரிய இரும்பு ஊசியை கழுத்தில் குத்திய சக மாணவன்..! samugammedia

Chithra / Apr 30th 2023, 4:18 pm
image

Advertisement

பொல்பெத்திகம நிகவெஹெர வித்தியாலயத்தின் 2ஆம் வருட மாணவன் ஒருவருக்கு மூன்றரை மணித்தியால சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

பாடசாலை தொடங்கியதும், காலையில் வகுப்பறையில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ​​புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த கூரிய ஊசியை மாணவர் ஒருவர், மற்ற மாணவரின் கழுத்தில் ஆழமாக அடித்தமையால் அதை அகற்ற முடியவில்லை

இதனால் குறித்த மாணவன்  வலியால் அலறி துடித்ததைக் கண்டு ஆசிரியர்களும் மாணவர்களும் பதற்றமடைந்தனர். 

அப்போது அதிபர் சுனில் பெமரத்ன மற்றுமொரு ஆசிரியரின் உதவியுடன் மாணவனை மோட்டார் சைக்கிளில் பொல்பெத்திகம ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்ததாக வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

பொல்பெத்திகம வைத்தியசாலையில் கூட அந்த ஊசியை அகற்றுவதற்கு வசதிகள் இல்லாததால் மாணவன் உடனடியாக அம்புயூலன்ஸ் மூலம் குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதன் பின்னர் எக்ஸ்ரே அறிக்கைகள் பெறப்பட்டு சம்பவம் இடம்பெற்று மூன்றரை மணித்தியாலங்களின் பின்னர் சத்திரசிகிச்சை மூலம் அந்த ஊசி அகற்றப்பட்டது.

இதையடுத்து குறித்த மாணவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குருநாகல் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாணவர்களுக்கிடையே கடும் மோதல் - கூரிய இரும்பு ஊசியை கழுத்தில் குத்திய சக மாணவன். samugammedia பொல்பெத்திகம நிகவெஹெர வித்தியாலயத்தின் 2ஆம் வருட மாணவன் ஒருவருக்கு மூன்றரை மணித்தியால சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குருநாகல் போதனா வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.பாடசாலை தொடங்கியதும், காலையில் வகுப்பறையில் இரு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, ​​புத்தகப் பையில் மறைத்து வைத்திருந்த கூரிய ஊசியை மாணவர் ஒருவர், மற்ற மாணவரின் கழுத்தில் ஆழமாக அடித்தமையால் அதை அகற்ற முடியவில்லைஇதனால் குறித்த மாணவன்  வலியால் அலறி துடித்ததைக் கண்டு ஆசிரியர்களும் மாணவர்களும் பதற்றமடைந்தனர். அப்போது அதிபர் சுனில் பெமரத்ன மற்றுமொரு ஆசிரியரின் உதவியுடன் மாணவனை மோட்டார் சைக்கிளில் பொல்பெத்திகம ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதித்ததாக வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.பொல்பெத்திகம வைத்தியசாலையில் கூட அந்த ஊசியை அகற்றுவதற்கு வசதிகள் இல்லாததால் மாணவன் உடனடியாக அம்புயூலன்ஸ் மூலம் குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதன் பின்னர் எக்ஸ்ரே அறிக்கைகள் பெறப்பட்டு சம்பவம் இடம்பெற்று மூன்றரை மணித்தியாலங்களின் பின்னர் சத்திரசிகிச்சை மூலம் அந்த ஊசி அகற்றப்பட்டது.இதையடுத்து குறித்த மாணவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குருநாகல் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement