கம்பஹா - சபுகஸ்கந்த, சியம்பலாபே தெற்கு பகுதியில் அமைந்துள்ள பழைய பிளாஸ்டிக் பொருட்களை தரம் பிரிக்கும் நிறுவனம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நேற்று மாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிர்ச் சேதங்களோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சபுகஸ்கந்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சபுகஸ்கந்த பிளாஸ்டிக் தரம் பிரிக்கும் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து கம்பஹா - சபுகஸ்கந்த, சியம்பலாபே தெற்கு பகுதியில் அமைந்துள்ள பழைய பிளாஸ்டிக் பொருட்களை தரம் பிரிக்கும் நிறுவனம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.நேற்று மாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.இந்த சம்பவத்தில் உயிர்ச் சேதங்களோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சபுகஸ்கந்த பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.