• Sep 24 2026

சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு

Aathira / Sep 24th 2026, 8:27 am
image

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் ஜனாதிபதியின் விசேட கருத்திட்டப் பிரிவின் பணிப்பாளராகவும் பணியாற்றிய சுகீஸ்வர பண்டார சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கோட்டை நீதிவான் பசன அமரசேன முன்னிலையில் சந்தேகநபரான சுகீஸ்வர பண்டார நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிவான், அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை நிராகரித்ததுடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி வரை அவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

2022ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளராகப் பணியாற்றிய காலத்திலும், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் ஜனாதிபதி செயலகத்தின் திட்டப் பணிப்பாளராகப் பணியாற்றிய காலத்திலும், ஜனாதிபதி செலவு தொடர்பான விடயதானத்தின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றுக் கொண்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஜனாதிபதியின் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் 19 இலட்சத்து 33 ஆயிரத்து 65 ரூபாவையும், திட்டப் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றிய காலத்தில் 42 இலட்சத்து 26 ஆயிரத்து 884 ரூபா 59 சதத்தையும் முறைகேடாகப் பயன்படுத்தினார் என்று இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேற்படி பதவிகளை வகித்த காலத்தில் அரச வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் அங்குள்ள ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமை தொடர்பிலும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது

சுகீஸ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளராகவும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் ஜனாதிபதியின் விசேட கருத்திட்டப் பிரிவின் பணிப்பாளராகவும் பணியாற்றிய சுகீஸ்வர பண்டார சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.கோட்டை நீதிவான் பசன அமரசேன முன்னிலையில் சந்தேகநபரான சுகீஸ்வர பண்டார நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.வழக்கை விசாரித்த நீதிவான், அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை நிராகரித்ததுடன், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி வரை அவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.2022ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளராகப் பணியாற்றிய காலத்திலும், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் ஜனாதிபதி செயலகத்தின் திட்டப் பணிப்பாளராகப் பணியாற்றிய காலத்திலும், ஜனாதிபதி செலவு தொடர்பான விடயதானத்தின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றுக் கொண்டதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.அதற்கமைய, ஜனாதிபதியின் செயலாளராகப் பணியாற்றிய காலத்தில் 19 இலட்சத்து 33 ஆயிரத்து 65 ரூபாவையும், திட்டப் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றிய காலத்தில் 42 இலட்சத்து 26 ஆயிரத்து 884 ரூபா 59 சதத்தையும் முறைகேடாகப் பயன்படுத்தினார் என்று இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.மேற்படி பதவிகளை வகித்த காலத்தில் அரச வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் அங்குள்ள ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியமை தொடர்பிலும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது

Advertisement

Advertisement

Advertisement