• May 04 2024

தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு குறிவைத்துள்ள சுமந்திரன், சிறிதரன்! - மாவை வெளியிட்ட பரபரப்புத் தகவல் samugammedia

Chithra / May 2nd 2023, 1:17 pm
image

Advertisement

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில்,

தமிழரசுக் கட்சியின் எம்.பிக்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் ஆகியோர் அப் பதவிக்கு குறிவைத்துள்ளதாகவும், அவர்களோடு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் தலைமைப் பதவிக்கு குறி வைத்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு வரலாற்றில் என்றுமில்லாதவாறு போட்டி நிலவுகின்றது என மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

தலைமைப் பதவி குறித்த நகர்வுகளில், சிறிதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கடந்த தேர்தலின் போதே களமிறங்கிவிட்டதாகவும், சுமந்திரனை வெல்ல வைப்பதற்கு, சிறிதரன் உதவியமைக்கான காரணமும் தலைமைப் பதவியைக் குறிவைத்ததாகவே அமைந்தது என்றும் மாவை குறிப்பிட்டுள்ளார்.

தலைமைப் பதவியைக் குறிவைத்து, இம் மூன்று பேரும் பல்வேறு நகர்வுகளில் ஈடுபட்டு வருவதாகவும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு குறிவைத்துள்ள சுமந்திரன், சிறிதரன் - மாவை வெளியிட்ட பரபரப்புத் தகவல் samugammedia இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில்,தமிழரசுக் கட்சியின் எம்.பிக்களான சுமந்திரன் மற்றும் சிறிதரன் ஆகியோர் அப் பதவிக்கு குறிவைத்துள்ளதாகவும், அவர்களோடு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் தலைமைப் பதவிக்கு குறி வைத்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கு வரலாற்றில் என்றுமில்லாதவாறு போட்டி நிலவுகின்றது என மாவை சேனாதிராசா தெரிவித்தார்.தலைமைப் பதவி குறித்த நகர்வுகளில், சிறிதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கடந்த தேர்தலின் போதே களமிறங்கிவிட்டதாகவும், சுமந்திரனை வெல்ல வைப்பதற்கு, சிறிதரன் உதவியமைக்கான காரணமும் தலைமைப் பதவியைக் குறிவைத்ததாகவே அமைந்தது என்றும் மாவை குறிப்பிட்டுள்ளார்.தலைமைப் பதவியைக் குறிவைத்து, இம் மூன்று பேரும் பல்வேறு நகர்வுகளில் ஈடுபட்டு வருவதாகவும் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement