• May 02 2024

பறவைகளுடனான பாச போராட்டம்...! உணவளிக்க முடியாது தவிக்கும் பறவை மனிதன்...!samugammedia

Sharmi / May 2nd 2023, 1:16 pm
image

Advertisement

பறவைகளிற்கு இரையிட்ட பறவை மனிதர் தற்பொழுது அவற்றுக்கு உணவளிக்க முடியாது தவித்து வருகின்றார்.



சென்னை ராயப்­பேட்டை பகுதியில் வசித்து வரும் சேகரே கடந்த 25 ஆண்டு­களாக தின­மும் தன்­னைத் தேடி வரும்  நான்­கா­யி­ரம் பற­வை­களுக்கு இரை­யிட்டு வந்­துள்­ளார்.

தர்­ம­புரி மாவட்­டத்­தைச் சேர்ந்த அவர் , 40 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் சென்­னைக்கு வந்­து­விட்­ட நிலையில் மின்­னணு கேம­ராக்­க­ளைப் பழுது பார்க்­கும் வேலையினை செய்கின்றார்.

ராயப்­பேட்டை பகு­தி­யில் வாடகை வீட்டில் குடி­யே­றிய அவர் அந்த வீட்­டின் மொட்டை மாடி­யில் பற­வை­களுக்கு இரை வைக்­கத் தொடங்­க இரை தேடி வரும் பற­வை­க­ளின் எண்­ணிக்கை ஒற்றை இலக்­கத்­தில் இருந்து நான்­காயிரமாக அதி­க­ரித்­துள்­ளது.



இந்­நி­லை­யில், வாடகை வீட்டின் உரி­மை­யா­ளர் வீட்டை விற்­க தீர்மானித்த வேளை இயற்கை ஆர்­வ­லர்­கள் பலர் அதை வாங்கி சேகருக்கே வழங்க முன்வந்த போதிலும் வீட்டின் உரிமையாளர் மறுத்ததுடன் வீட்டினையும் வேறு ஒருவரிற்கு விற்றுள்ளார்.

இதனால் சேகர்  அண்­மை­யில் வேறு வீட்­டில் குடி­யேறியுள்ளார்.

தான் வீடு மாறியதால் இரை தேடி வரும் புறா, கிளி, சிட்­டுக்­கு­ருவி உள்ளிட்ட பற­வை­கள் ஏமாற்­றத்­து­டன் திரும்­பிச் செல்­வ­தா­க அவர் கவலையடைந்துள்ளார்.

பறவைகளுடனான பாச போராட்டம். உணவளிக்க முடியாது தவிக்கும் பறவை மனிதன்.samugammedia பறவைகளிற்கு இரையிட்ட பறவை மனிதர் தற்பொழுது அவற்றுக்கு உணவளிக்க முடியாது தவித்து வருகின்றார். சென்னை ராயப்­பேட்டை பகுதியில் வசித்து வரும் சேகரே கடந்த 25 ஆண்டு­களாக தின­மும் தன்­னைத் தேடி வரும்  நான்­கா­யி­ரம் பற­வை­களுக்கு இரை­யிட்டு வந்­துள்­ளார். தர்­ம­புரி மாவட்­டத்­தைச் சேர்ந்த அவர் , 40 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் சென்­னைக்கு வந்­து­விட்­ட நிலையில் மின்­னணு கேம­ராக்­க­ளைப் பழுது பார்க்­கும் வேலையினை செய்கின்றார். ராயப்­பேட்டை பகு­தி­யில் வாடகை வீட்டில் குடி­யே­றிய அவர் அந்த வீட்­டின் மொட்டை மாடி­யில் பற­வை­களுக்கு இரை வைக்­கத் தொடங்­க இரை தேடி வரும் பற­வை­க­ளின் எண்­ணிக்கை ஒற்றை இலக்­கத்­தில் இருந்து நான்­காயிரமாக அதி­க­ரித்­துள்­ளது.இந்­நி­லை­யில், வாடகை வீட்டின் உரி­மை­யா­ளர் வீட்டை விற்­க தீர்மானித்த வேளை இயற்கை ஆர்­வ­லர்­கள் பலர் அதை வாங்கி சேகருக்கே வழங்க முன்வந்த போதிலும் வீட்டின் உரிமையாளர் மறுத்ததுடன் வீட்டினையும் வேறு ஒருவரிற்கு விற்றுள்ளார். இதனால் சேகர்  அண்­மை­யில் வேறு வீட்­டில் குடி­யேறியுள்ளார். தான் வீடு மாறியதால் இரை தேடி வரும் புறா, கிளி, சிட்­டுக்­கு­ருவி உள்ளிட்ட பற­வை­கள் ஏமாற்­றத்­து­டன் திரும்­பிச் செல்­வ­தா­க அவர் கவலையடைந்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement