• Nov 13 2024

திருட்டுத்தனமாக கூட்டமைப்புக்குள் நுழைந்தவரே சுமந்திரன்- எமில்காந்தன் சாட்டை..!

Sharmi / Nov 4th 2024, 1:56 pm
image

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் திருட்டுத்தனமாக தேசியபட்டியல் ஊடாக அரசியலுக்குள் நுளைந்தவரே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் என வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைகுழு 7 இன் தலைமை வேட்பாளர் எமில்காந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று(04)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசுக் கட்சியின் தலைமை யார் என்று நான் அண்மையில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தேன்.அதற்கு சுமந்திரன் பதில் அளித்துள்ளார். 

அவரது பதிலில் வன்னியில் உள்ள எமது வேட்பாளர்களுக்கும் எமில்காந்தனுக்கும் இடையிலான விடயம் அது. அந்த லெவலுக்கு தான் இறங்கிப்போகத்தேவையில்லை என்றவாறாக ஒருபதிலை சொல்லியிருக்கிறார். 

தமிழ் மக்களின் இரத்தத்தாலும் சதையாலும் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பில் திருட்டுத்தனமாக தேசியப் பட்டியல் ஊடாக அரசியலுக்குள் நுளைந்தவர் நீங்கள். 

அந்த சுமந்திரனுக்கு வன்னியில் இருக்கும் பிரச்சனைகளுக்காக இறங்கிவரவேண்டிய தேவை இல்லை. அப்படி சொல்வது அவருக்கு பெரிய விடயமாக இருக்காது. 

மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய முடியாத இவர்கள்  தமது இரண்டாம் கட்ட உறுப்பினர்களை வேட்பாளர்களாக அனுப்பி அவர்கள் மூலமாக இன்னுமொரு திருட்டு வெற்றியை நுட்பமான முறையில் பெற முயற்சிக்கின்றார்கள்.

சுமந்திரனால் பதில் அளிக்க முடியாத அளவுக்கு வன்னி மாவட்டம் ஒன்றும் இரண்டாம் நிலையிலோ அல்லது இங்கு வாழ்வோர் இரண்டாம் தர பிரஜைகளோ அல்ல.வன்னியில் இருப்பவர்கள் சுமந்திரனை விட தரமான வேலைகளை செய்யக்கூடியவர்கள். 

தமிழ்க் கூட்டமைப்பு உருவானபோது என்னுடைய பங்களிப்பும் அதில் இருந்தது.

அதனூடாக மிக கடுமையான காலங்களையும் நாங்கள் கடந்து அதன் பலம் நிர்ணயிக்கப்பட்டது. அந்த பலத்தின் மீது ஏறிநின்று திருட்டுத்தனமாக உள்ளே வந்து இவ்வாறான பதில் சொல்வதை முதலில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

அதேபோல வன்னியில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரது ஆதரவாளர்கள் பிரச்சாரக் கூட்டங்களில் எமது சின்னமான கோடாலிச் சின்னத்தை தொடர்ச்சியாக விமர்சிக்கிறார்கள்.அவற்றை இன்றிலிருந்து நிறுத்திக்கொள்ளுங்கள். 

காரணம் உங்களுடைய அத்தனை வரலாறுகளும் நான் அறிந்தவன். நீங்கள் ஆரம்பத்தில் பாராளுமன்றம் சென்ற காலத்திலிருந்து அத்தனையும் நான் அறிந்தவன். 

எனவே மக்களை பிழையாக வழிநடாத்தி என்மீது சேறு பூசுவதை நிறுத்துங்கள். அல்லது அடுத்த பத்திரிகையாளர் மாநாட்டில் நேரடியாக உங்களைப்பற்றி பேசவேண்டிய தேவை ஏற்படும். 

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சிவசக்தி ஆனந்தன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். 

செல்வம் அடைக்கலநாதன் போட்டியிட்ட அணி அரசாங்கத்திடம் லஞ்சமாக பணம் பெற்றுக்கொண்டு தேர்தலில் முகம் கொடுப்பதாக பகிரங்கமாக அவர் சொல்லியிருந்தார். 

அந்த குற்றச்சாட்டுக்கு என்ன நடந்தது. அவர்கள் பணம் வாங்கியதை சிவசக்தி ஆனந்தன் நிரூபித்தாரா அல்லது வாங்கவில்லை என்று அடைக்கலநாதன் நிரூபித்தாரா என்பதை மக்களுக்கு தெரிவியுங்கள். ஏனெனில் இன்று இருவரும் ஒரே கட்சியில் போட்டியிடுகின்றீர்கள்.

எந்த கட்சியினையும் விமர்சிப்பதில்லை என்பது எமது கொள்கையாக இருந்தது.ஆனால் நீங்கள் எங்களை சீண்டிக்கொண்டிருந்தால் நாமும் பதில்சொல்லியாகவேண்டும் என்றார்.



திருட்டுத்தனமாக கூட்டமைப்புக்குள் நுழைந்தவரே சுமந்திரன்- எமில்காந்தன் சாட்டை. தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் திருட்டுத்தனமாக தேசியபட்டியல் ஊடாக அரசியலுக்குள் நுளைந்தவரே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் என வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைகுழு 7 இன் தலைமை வேட்பாளர் எமில்காந்தன் தெரிவித்துள்ளார்.வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று(04)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழரசுக் கட்சியின் தலைமை யார் என்று நான் அண்மையில் ஒரு கேள்வி எழுப்பியிருந்தேன்.அதற்கு சுமந்திரன் பதில் அளித்துள்ளார். அவரது பதிலில் வன்னியில் உள்ள எமது வேட்பாளர்களுக்கும் எமில்காந்தனுக்கும் இடையிலான விடயம் அது. அந்த லெவலுக்கு தான் இறங்கிப்போகத்தேவையில்லை என்றவாறாக ஒருபதிலை சொல்லியிருக்கிறார். தமிழ் மக்களின் இரத்தத்தாலும் சதையாலும் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பில் திருட்டுத்தனமாக தேசியப் பட்டியல் ஊடாக அரசியலுக்குள் நுளைந்தவர் நீங்கள். அந்த சுமந்திரனுக்கு வன்னியில் இருக்கும் பிரச்சனைகளுக்காக இறங்கிவரவேண்டிய தேவை இல்லை. அப்படி சொல்வது அவருக்கு பெரிய விடயமாக இருக்காது. மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய முடியாத இவர்கள்  தமது இரண்டாம் கட்ட உறுப்பினர்களை வேட்பாளர்களாக அனுப்பி அவர்கள் மூலமாக இன்னுமொரு திருட்டு வெற்றியை நுட்பமான முறையில் பெற முயற்சிக்கின்றார்கள்.சுமந்திரனால் பதில் அளிக்க முடியாத அளவுக்கு வன்னி மாவட்டம் ஒன்றும் இரண்டாம் நிலையிலோ அல்லது இங்கு வாழ்வோர் இரண்டாம் தர பிரஜைகளோ அல்ல.வன்னியில் இருப்பவர்கள் சுமந்திரனை விட தரமான வேலைகளை செய்யக்கூடியவர்கள். தமிழ்க் கூட்டமைப்பு உருவானபோது என்னுடைய பங்களிப்பும் அதில் இருந்தது.அதனூடாக மிக கடுமையான காலங்களையும் நாங்கள் கடந்து அதன் பலம் நிர்ணயிக்கப்பட்டது. அந்த பலத்தின் மீது ஏறிநின்று திருட்டுத்தனமாக உள்ளே வந்து இவ்வாறான பதில் சொல்வதை முதலில் நிறுத்திக்கொள்ளுங்கள்.அதேபோல வன்னியில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரது ஆதரவாளர்கள் பிரச்சாரக் கூட்டங்களில் எமது சின்னமான கோடாலிச் சின்னத்தை தொடர்ச்சியாக விமர்சிக்கிறார்கள்.அவற்றை இன்றிலிருந்து நிறுத்திக்கொள்ளுங்கள். காரணம் உங்களுடைய அத்தனை வரலாறுகளும் நான் அறிந்தவன். நீங்கள் ஆரம்பத்தில் பாராளுமன்றம் சென்ற காலத்திலிருந்து அத்தனையும் நான் அறிந்தவன். எனவே மக்களை பிழையாக வழிநடாத்தி என்மீது சேறு பூசுவதை நிறுத்துங்கள். அல்லது அடுத்த பத்திரிகையாளர் மாநாட்டில் நேரடியாக உங்களைப்பற்றி பேசவேண்டிய தேவை ஏற்படும். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சிவசக்தி ஆனந்தன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். செல்வம் அடைக்கலநாதன் போட்டியிட்ட அணி அரசாங்கத்திடம் லஞ்சமாக பணம் பெற்றுக்கொண்டு தேர்தலில் முகம் கொடுப்பதாக பகிரங்கமாக அவர் சொல்லியிருந்தார். அந்த குற்றச்சாட்டுக்கு என்ன நடந்தது. அவர்கள் பணம் வாங்கியதை சிவசக்தி ஆனந்தன் நிரூபித்தாரா அல்லது வாங்கவில்லை என்று அடைக்கலநாதன் நிரூபித்தாரா என்பதை மக்களுக்கு தெரிவியுங்கள். ஏனெனில் இன்று இருவரும் ஒரே கட்சியில் போட்டியிடுகின்றீர்கள்.எந்த கட்சியினையும் விமர்சிப்பதில்லை என்பது எமது கொள்கையாக இருந்தது.ஆனால் நீங்கள் எங்களை சீண்டிக்கொண்டிருந்தால் நாமும் பதில்சொல்லியாகவேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement