• Feb 21 2025

ரெலிகொம் கேபிள்களை அறுத்து விற்பனை செய்த சந்தேகநபர் கைது!

Thansita / Feb 20th 2025, 11:03 pm
image

அரச சொத்துக்களை நாசம் செய்தல்.மற்றும் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய  சந்தேக நபர் ஒருவரை  நேற்று முன்தினம் நெல்லியடி போலீசாரால் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் நெல்லியடி பகுதியில் நீண்ட காலமாக. ஸ்ரீலங்கா டெலிக்கும் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கேபிள்களை அறுத்து அதனை விற்பனை செய்தல் உட்பட பல்வேறு குற்ற செயல்களுடன் சம்பந்தப்பட்டவர் என்றும்,  

குறித்த சந்தேக நபர். கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மந்துவில் பகுதியை சொந்த இடமாகக் கொண்டவர் என்றும், நெல்லியடி பொலிஸ் பிரிவில் திருமணம் செய்து வசித்து வருவதாகவும் அறியப்படுவதுடன்,  கொடிகாமம் பொலிஸ், சாவகச்சேரி பொலிஸ்,  ஆகிய  பொலிஸ் நிலையங்களிலும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் என்றும். நெல்லியாடி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன 

குறித்த சந்தேக நபர். ஸ்ரீலங்கா டெலிகாம். நிறுவனத்துக்கு சொந்தமான கேபிள்களை நெல்லியடி கரணவாய் பகுதியில்  நீண்ட நாட்களாக அறுத்து அதனை விற்பனை செய்து வந்தவுடன்,  ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனம் நெல்லியடி போலீசில் பத்திற்கு  மேற்பட்ட முறைப்பாடுகளை செய்திருந்தனர்.

இந்நிலையில்  இரகசியமாக தீவிரமாக தேடி வந்த நெல்லியடி பொலிசார்,  வீடு ஒன்றில் பதுங்கியிருந்தவேளை நெல்லியடி பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி தலமையிலான பொலிஸார் சுற்றி வளைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரின்  சகோதரி  தென்மராட்சி பகுதியிலுள்ள காவல் நிலையம் ஒன்றில் காவல் துறை உத்தியோகத்தராக  பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 சந்தேக நபரை நேற்று புதன்கிழமை பருத்தித்துறை நீதி மன்றில் முற்படுத்தியவேளை அவரிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ரெலிகொம் கேபிள்களை அறுத்து விற்பனை செய்த சந்தேகநபர் கைது அரச சொத்துக்களை நாசம் செய்தல்.மற்றும் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய  சந்தேக நபர் ஒருவரை  நேற்று முன்தினம் நெல்லியடி போலீசாரால் கைது செய்துள்ளனர்.குறித்த நபர் நெல்லியடி பகுதியில் நீண்ட காலமாக. ஸ்ரீலங்கா டெலிக்கும் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு கேபிள்களை அறுத்து அதனை விற்பனை செய்தல் உட்பட பல்வேறு குற்ற செயல்களுடன் சம்பந்தப்பட்டவர் என்றும்,  குறித்த சந்தேக நபர். கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மந்துவில் பகுதியை சொந்த இடமாகக் கொண்டவர் என்றும், நெல்லியடி பொலிஸ் பிரிவில் திருமணம் செய்து வசித்து வருவதாகவும் அறியப்படுவதுடன்,  கொடிகாமம் பொலிஸ், சாவகச்சேரி பொலிஸ்,  ஆகிய  பொலிஸ் நிலையங்களிலும் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் என்றும். நெல்லியாடி பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன குறித்த சந்தேக நபர். ஸ்ரீலங்கா டெலிகாம். நிறுவனத்துக்கு சொந்தமான கேபிள்களை நெல்லியடி கரணவாய் பகுதியில்  நீண்ட நாட்களாக அறுத்து அதனை விற்பனை செய்து வந்தவுடன்,  ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனம் நெல்லியடி போலீசில் பத்திற்கு  மேற்பட்ட முறைப்பாடுகளை செய்திருந்தனர்.இந்நிலையில்  இரகசியமாக தீவிரமாக தேடி வந்த நெல்லியடி பொலிசார்,  வீடு ஒன்றில் பதுங்கியிருந்தவேளை நெல்லியடி பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி தலமையிலான பொலிஸார் சுற்றி வளைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.குறித்த சந்தேக நபரின்  சகோதரி  தென்மராட்சி பகுதியிலுள்ள காவல் நிலையம் ஒன்றில் காவல் துறை உத்தியோகத்தராக  பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபரை நேற்று புதன்கிழமை பருத்தித்துறை நீதி மன்றில் முற்படுத்தியவேளை அவரிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement