• Feb 21 2025

வடமாகாணத்தில் உள்ள திறமை மிக்க வீரர்களை தேசிய மட்ட அணிகளில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: ஜெகதீஸ்வரன் எம்.பி

Thansita / Feb 20th 2025, 11:09 pm
image

வடமாகாணத்தில் உள்ள திறமை மிக்க வீரர்களை தேசிய மட்ட அணிகளில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

விளையாட்டு துறை அமைச்சுககான உப குழுக் கூட்டம் பாராளுமன்ற கட்டத் தொகுதியில் இன்று இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சுக்கான உப குழுக் கூட்டம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. 

அதில் உறுப்பினராக  இருப்பதால் எமது பிரதேசத்தின் விளையாட்டுத் துறை தொடர்பாக பல விடயங்களை முன்வைக்க முடிந்தது. இது தொடர்பாக பல விடயங்களை சுட்டிக் காட்டினேன். ஓமந்தையில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கிற்கு தேவையான ஆளணி, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஏனைய தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தி அதனை பெற்றுக் கொடுக்க வேணடும் என கோரிக்கை முன்வைத்தேன்.

அத்துடன், பிரதேசத்தில் காணப்படும் விளையாட்டு கழகங்கள் தொடர்பாக சிறந்த அவதானத்தை செலுத்த வேண்டும் எனவும் வடமாகாணத்தில் உள்ள திறமை மிக்க வீரர்களை தேசிய மட்ட அணிகளில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.

போதைப் பொருள் பாவனை, சமூக வலைத்தளங்களில் இருக்கும் இளைஞர், யுவதிகளின் அவதானத்தை நல்ல வழியில் கொண்டு வர விளையாட்டு துறை காணப்படுகின்றது. 

அதனை ஊக்குவிக்க வேண்டும. எதிர்வரும் காலங்களில் இது தொடர்பாக கவனம் செலுத்துவதாகவும், எழுத்து மூல முன்மொழிவுகளை வழங்குமாறும் இளைஞர், விவகார விளையாட்டு துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார். 

அதற்கு அமைவாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் விளையாட்டுத்துறை சார்பாக ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் எனக்கு எழுத்து மூலமாக தந்தால் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார். 


வடமாகாணத்தில் உள்ள திறமை மிக்க வீரர்களை தேசிய மட்ட அணிகளில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்: ஜெகதீஸ்வரன் எம்.பி வடமாகாணத்தில் உள்ள திறமை மிக்க வீரர்களை தேசிய மட்ட அணிகளில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்விளையாட்டு துறை அமைச்சுககான உப குழுக் கூட்டம் பாராளுமன்ற கட்டத் தொகுதியில் இன்று இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சுக்கான உப குழுக் கூட்டம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. அதில் உறுப்பினராக  இருப்பதால் எமது பிரதேசத்தின் விளையாட்டுத் துறை தொடர்பாக பல விடயங்களை முன்வைக்க முடிந்தது. இது தொடர்பாக பல விடயங்களை சுட்டிக் காட்டினேன். ஓமந்தையில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கிற்கு தேவையான ஆளணி, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஏனைய தேவைகள் தொடர்பில் கவனம் செலுத்தி அதனை பெற்றுக் கொடுக்க வேணடும் என கோரிக்கை முன்வைத்தேன்.அத்துடன், பிரதேசத்தில் காணப்படும் விளையாட்டு கழகங்கள் தொடர்பாக சிறந்த அவதானத்தை செலுத்த வேண்டும் எனவும் வடமாகாணத்தில் உள்ள திறமை மிக்க வீரர்களை தேசிய மட்ட அணிகளில் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.போதைப் பொருள் பாவனை, சமூக வலைத்தளங்களில் இருக்கும் இளைஞர், யுவதிகளின் அவதானத்தை நல்ல வழியில் கொண்டு வர விளையாட்டு துறை காணப்படுகின்றது. அதனை ஊக்குவிக்க வேண்டும. எதிர்வரும் காலங்களில் இது தொடர்பாக கவனம் செலுத்துவதாகவும், எழுத்து மூல முன்மொழிவுகளை வழங்குமாறும் இளைஞர், விவகார விளையாட்டு துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார். அதற்கு அமைவாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் விளையாட்டுத்துறை சார்பாக ஏதாவது பிரச்சனைகள் இருப்பின் எனக்கு எழுத்து மூலமாக தந்தால் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement