• Apr 20 2025

இரு கட்சியினருக்கிடையில் மோதல் - கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்குப் பிணை

Chithra / Apr 17th 2025, 1:32 pm
image


சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாய்குட்டியர் சந்தி பகுதியில் கடந்த 15ஆம் திகதி இரு கட்சியினருக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களுக்கும் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று (16) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, சந்தேக நபர்களை தலா 50,000 ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. 

கடந்த 15 ஆம் திகதி இரவு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸின் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. 

குறித்த சம்பவத்தில் காயமடைந்த பலர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டார வேட்பாளர் உட்பட ஆறு பேர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.


இரு கட்சியினருக்கிடையில் மோதல் - கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்குப் பிணை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாய்குட்டியர் சந்தி பகுதியில் கடந்த 15ஆம் திகதி இரு கட்சியினருக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களுக்கும் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று (16) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, சந்தேக நபர்களை தலா 50,000 ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 15 ஆம் திகதி இரவு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸின் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. குறித்த சம்பவத்தில் காயமடைந்த பலர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வட்டார வேட்பாளர் உட்பட ஆறு பேர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement