• Mar 03 2025

நீர்கொழும்பு பகுதியில் 10 கோடி ரூபா பெறுமதிமிக்க போதைமாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது..!

Sharmi / Mar 2nd 2025, 7:11 pm
image

நீர்கொழும்பு பகுதியில் 10 கோடி ரூபா பெறுமதியான போதைமாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நீர்கொழும்பு கொப்பரா சந்திக்கருகில், கொழும்பு குற்றப்பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்றையதினம்(01) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றை சோதனையிட்ட போது அதிலிருந்து பெருமளவான போதைமாத்திரைகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர் 5 இலட்சம் போதைமாத்திரைகளை வேனில் கடத்திக் கொண்டு சென்றுள்ளதுடன் அதன் சந்தைப் பெறுமதி சுமார் 10 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கையடக்க தொலைபேசி மற்றும் வேன் ஆகியன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த மாத்திரைகள் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கம் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப்பிரிவு முன்னெடுத்து வருகிறது

நீர்கொழும்பு பகுதியில் 10 கோடி ரூபா பெறுமதிமிக்க போதைமாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது. நீர்கொழும்பு பகுதியில் 10 கோடி ரூபா பெறுமதியான போதைமாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நீர்கொழும்பு கொப்பரா சந்திக்கருகில், கொழும்பு குற்றப்பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்றையதினம்(01) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.இதன்போது சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றை சோதனையிட்ட போது அதிலிருந்து பெருமளவான போதைமாத்திரைகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.சந்தேகநபர் 5 இலட்சம் போதைமாத்திரைகளை வேனில் கடத்திக் கொண்டு சென்றுள்ளதுடன் அதன் சந்தைப் பெறுமதி சுமார் 10 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கையடக்க தொலைபேசி மற்றும் வேன் ஆகியன பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இதேவேளை குறித்த மாத்திரைகள் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கம் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப்பிரிவு முன்னெடுத்து வருகிறது

Advertisement

Advertisement

Advertisement