• Apr 19 2025

யாழ்ப்பாணம் கடற்கரைப் பகுதியில் ரி-56 ரக துப்பாக்கி மீட்பு

Chithra / Apr 16th 2025, 8:57 am
image


யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியில் ரி-56 ரக துப்பாக்கியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையில் நேற்றிரவு இந்த ஆயுதம் மீட்கப்பட்டுள்ளது.


கைப்பற்றப்பட்ட துப்பாக்கி பாவிக்க கூடிய நிலையில் இருப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள யாழ்ப்பாணம் பொலிஸார், அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்ட துப்பாக்கியை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கடற்கரைப் பகுதியில் ரி-56 ரக துப்பாக்கி மீட்பு யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியில் ரி-56 ரக துப்பாக்கியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையில் நேற்றிரவு இந்த ஆயுதம் மீட்கப்பட்டுள்ளது.கைப்பற்றப்பட்ட துப்பாக்கி பாவிக்க கூடிய நிலையில் இருப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள யாழ்ப்பாணம் பொலிஸார், அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்ட துப்பாக்கியை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement