முன்னாள் போராளியும், போராளிகள் நலன்புரி சங்க தலைவருமான செ.அரவிந்தன் இரு நாட்களாக வெலிக்கடை சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.
குறித்த நபரை தனது முகநூலில் இட்ட பதிவு தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கு கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு கடந்த பங்குனி மாத இறுதியில் அழைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தனது கைது குறித்து B அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தன்னை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் கோரி நேற்றையதினத்திலிருந்து இன்று இரண்டாவது நாளாக வெலிக்கடை சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றில் முற்படுத்துங்கள்.வெலிக்கடை சிறையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த முன்னாள் போராளி அரவிந்தன். முன்னாள் போராளியும், போராளிகள் நலன்புரி சங்க தலைவருமான செ.அரவிந்தன் இரு நாட்களாக வெலிக்கடை சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.குறித்த நபரை தனது முகநூலில் இட்ட பதிவு தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்கு கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு கடந்த பங்குனி மாத இறுதியில் அழைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் தனது கைது குறித்து B அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தன்னை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் கோரி நேற்றையதினத்திலிருந்து இன்று இரண்டாவது நாளாக வெலிக்கடை சிறைச்சாலையில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.