பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளுடனும் மாகாண சபைத் தேர்தல் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோமென பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் காணப்படும் அடிப்படை சட்ட மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும். காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் தேர்தலை நடத்த முடியாது.
மாகாணசபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்த வேண்டும் என்று ஒரு தரப்பினரும், புதிய தேர்தல் முறையில் நடத்த வேண்டும் என்று பிறிதொரு தரப்பினரும் யோசனைகளை முன்வைத்தார்கள்.
மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறையில் நடத்துவது என்பது குறித்து ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைப்பதற்கு 12 பேரை உள்ளடக்கிய குழுவை நியமிக்கும் யோசனை அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சகல எதிர்க்கட்சிகளின் பிரதிநிதித்துவத்தையும் உள்ளடக்கிய வகையில் சபாநாயகரால் இந்த குழு வெகுவிரைவில் நியமிக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் எதிர்வரும் வாராம் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாகாணசபைத் தேர்தலில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண்பதற்கு சகல எதிர்க்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மாகாணசபைத் தேர்தல் குறித்து சகல அரசியல் கட்சிகளுடனும் வெளிப்படையாக பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகவுள்ளோம் என ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
மாகாணசபை தேர்தல் குறித்து சகல கட்சிகளுடனும் பேச்சு - அரசு நடவடிக்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளுடனும் மாகாண சபைத் தேர்தல் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோமென பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் காணப்படும் அடிப்படை சட்ட மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு தீர்வு காண வேண்டும். காணப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் தேர்தலை நடத்த முடியாது.மாகாணசபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்த வேண்டும் என்று ஒரு தரப்பினரும், புதிய தேர்தல் முறையில் நடத்த வேண்டும் என்று பிறிதொரு தரப்பினரும் யோசனைகளை முன்வைத்தார்கள்.மாகாணசபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறையில் நடத்துவது என்பது குறித்து ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைப்பதற்கு 12 பேரை உள்ளடக்கிய குழுவை நியமிக்கும் யோசனை அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.சகல எதிர்க்கட்சிகளின் பிரதிநிதித்துவத்தையும் உள்ளடக்கிய வகையில் சபாநாயகரால் இந்த குழு வெகுவிரைவில் நியமிக்கப்படும். இது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் எதிர்வரும் வாராம் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மாகாணசபைத் தேர்தலில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண்பதற்கு சகல எதிர்க்கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மாகாணசபைத் தேர்தல் குறித்து சகல அரசியல் கட்சிகளுடனும் வெளிப்படையாக பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராகவுள்ளோம் என ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.