• May 19 2024

இந்தியாவில் இருந்து திரும்பிய தமிழ் குடும்பஸ்தர் கட்டுநாயக்கவில் கைது..! முறைப்பாட்டை விசாரிக்காது இழுத்தடிக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு..! samugammedia

Chithra / Jun 28th 2023, 1:32 pm
image

Advertisement

கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சென்று மீண்டும் இலங்கைக்கு நாடு திரும்பிய தமிழ் குடும்பஸ்தர்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால்  கைது செய்தமை குறித்து  மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டபோதிலும்  அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என  கைது செய்யப்பட இளைஞனின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார்.

செல்லபையா சுதாகரன் என்ற குடும்பஸ்தரே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த குடும்பஸ்தரின் கைது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கைது செய்யப்பட்ட குடும்பஸ்தரின் சகோதரன் கருத்து தெரிவிக்கும் போது,


எனது சகோதரனான சுதாகரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது பற்றி எமக்கு தெரியாது.

எனவே திருகோணமலையில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தோம்.

அப்போது மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் பொலிஸாருக்கு எடுத்து கதைத்த போது எனது சகோதரரை கிருலப்பனையில் வைத்திருப்பதாக தெரிவித்தனர்.

எனவே மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து இது தொடர்பில் எம்மிடமிருந்து கடிதம் ஒன்றை கோரினர். குறித்த கடிதம் என்னால் சமர்பிக்கப்பட்ட போதிலும்  அதற்கான எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட எனது சகோதரனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளமையை நாம் செய்திகளில் கண்டோம்.

எனவே மீண்டும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இது தொடர்பில் விசாரிக்க சென்ற போது நாங்கள் சமர்பித்த கடிதம் உயரிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஒரு மாதம் கழிந்தே பதில் கிடைக்கப்பெறுவதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் எனது சகோதரன் தற்போது எங்கு இருக்கின்றார் என்பதையாவது பார்த்து கூறும் படி நான் கேட்க்க, அதற்கு அவர்கள் எனது சகோதரன் புஞ்சி பொரேல்ல எனும் இடத்தில் இருப்பதாக கூறினர்.

இதேவேளை எங்களை அங்கு சென்று விசாரித்து பார்க்குமாறும் பணித்தனர்.

இந்நிலையில் குறித்த இடத்தில் பொலிஸ் சிறைச்சாலை எங்குள்ளது என்பதை நாம் அறிந்ததில்லை என்பதோடு ஒரு பிரச்சினைக்கன தீர்வை வேண்டியே மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வருகின்றோம் என்பதை நாம் சுட்டிக்காட்டினோம் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து திரும்பிய தமிழ் குடும்பஸ்தர் கட்டுநாயக்கவில் கைது. முறைப்பாட்டை விசாரிக்காது இழுத்தடிக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு. samugammedia கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சென்று மீண்டும் இலங்கைக்கு நாடு திரும்பிய தமிழ் குடும்பஸ்தர்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால்  கைது செய்தமை குறித்து  மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டபோதிலும்  அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என  கைது செய்யப்பட இளைஞனின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார்.செல்லபையா சுதாகரன் என்ற குடும்பஸ்தரே கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் குறித்த குடும்பஸ்தரின் கைது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பில் கைது செய்யப்பட்ட குடும்பஸ்தரின் சகோதரன் கருத்து தெரிவிக்கும் போது,எனது சகோதரனான சுதாகரன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது பற்றி எமக்கு தெரியாது.எனவே திருகோணமலையில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சென்று முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தோம்.அப்போது மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் பொலிஸாருக்கு எடுத்து கதைத்த போது எனது சகோதரரை கிருலப்பனையில் வைத்திருப்பதாக தெரிவித்தனர்.எனவே மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து இது தொடர்பில் எம்மிடமிருந்து கடிதம் ஒன்றை கோரினர். குறித்த கடிதம் என்னால் சமர்பிக்கப்பட்ட போதிலும்  அதற்கான எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.இந்நிலையில் கைது செய்யப்பட்ட எனது சகோதரனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளமையை நாம் செய்திகளில் கண்டோம்.எனவே மீண்டும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இது தொடர்பில் விசாரிக்க சென்ற போது நாங்கள் சமர்பித்த கடிதம் உயரிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஒரு மாதம் கழிந்தே பதில் கிடைக்கப்பெறுவதாகவும் தெரிவித்தனர்.இந்நிலையில் எனது சகோதரன் தற்போது எங்கு இருக்கின்றார் என்பதையாவது பார்த்து கூறும் படி நான் கேட்க்க, அதற்கு அவர்கள் எனது சகோதரன் புஞ்சி பொரேல்ல எனும் இடத்தில் இருப்பதாக கூறினர்.இதேவேளை எங்களை அங்கு சென்று விசாரித்து பார்க்குமாறும் பணித்தனர்.இந்நிலையில் குறித்த இடத்தில் பொலிஸ் சிறைச்சாலை எங்குள்ளது என்பதை நாம் அறிந்ததில்லை என்பதோடு ஒரு பிரச்சினைக்கன தீர்வை வேண்டியே மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வருகின்றோம் என்பதை நாம் சுட்டிக்காட்டினோம் என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement