• Apr 06 2025

தமிழ்நாடு மீனவர்கள் விவகாரம் - இலங்கையில் பிரதமர் மோடி பேசியது என்ன?

Thansita / Apr 5th 2025, 3:44 pm
image

இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (05) கைச்சாத்திடப்பட்டது

இதனையடுத்து  பிரதமர் மோடிக்கு  'இலங்கை மித்ர விபூஷண' விருது வழங்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

மீனவர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் நாம் முன்னேற வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறோம்.

அந்த வகையில் இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.

2019 பயங்கரவாதத் தாக்குதல், கோவிட் தொற்றுஇ  பொருளாதார நெருக்கடி என ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் இலங்கை மக்களுடன் நாம் நின்றுள்ளோம். 

எமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையிலும், தொலைநோக்குப் பார்வையான 'மகாசாகர்' ஆகிய இரண்டிலும் இலங்கைக்கு சிறப்பு இடம் உண்டு என மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

தமிழ்நாடு மீனவர்கள் விவகாரம் - இலங்கையில் பிரதமர் மோடி பேசியது என்ன இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை (05) கைச்சாத்திடப்பட்டதுஇதனையடுத்து  பிரதமர் மோடிக்கு  'இலங்கை மித்ர விபூஷண' விருது வழங்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,மீனவர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் நாம் முன்னேற வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறோம்.அந்த வகையில் இந்திய மீனவர்களை உடனடியாக விடுவித்து, அவர்களின் படகுகளை திருப்பி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்.2019 பயங்கரவாதத் தாக்குதல், கோவிட் தொற்றுஇ  பொருளாதார நெருக்கடி என ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் இலங்கை மக்களுடன் நாம் நின்றுள்ளோம். எமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையிலும், தொலைநோக்குப் பார்வையான 'மகாசாகர்' ஆகிய இரண்டிலும் இலங்கைக்கு சிறப்பு இடம் உண்டு என மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement