• Mar 21 2025

முல்லையில் தமிழரசுக்கட்சி- வேட்புமனுத் தாக்கல்..!

Thansita / Mar 19th 2025, 6:37 pm
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கைத் தமிழரசுக்கட்சி மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்குரிய வேட்புமனுப் பத்திரங்களை இன்று (19.03.2025) கையளித்தது.

அந்தவகையில் முல்லைத்தீவு  மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுப் பத்திரங்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுசெயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கையெழுத்திட்டார்.

அதனைத்தொடர்ந்து கரைதுறைப்பற்று, துணுக்காய், புதுக்குடியிருப்பு ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்குரிய வேட்பு மனுப்பத்திரங்களை இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரைராசா ரவிகரன் கையளித்தார்.

முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள மாவீரன் பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு குறித்த வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டன.

அத்தோடு இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் மாந்தை கிழக்கு உள்ளூராட்சி மன்றத்திற்குரிய வேட்புமனு பத்திரம் நாளையதினம் (20.03.2025) கையளிக்கப்படுமென இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பெருந்திரளான இலங்கைத் தமிழரசுக்கட்சித் தொண்டர்கள் மற்றும், உள்ளூராட்சிமன்ற வேட்பாளர்கள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லையில் தமிழரசுக்கட்சி- வேட்புமனுத் தாக்கல். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கைத் தமிழரசுக்கட்சி மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்குரிய வேட்புமனுப் பத்திரங்களை இன்று (19.03.2025) கையளித்தது.அந்தவகையில் முல்லைத்தீவு  மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனுப் பத்திரங்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுசெயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கையெழுத்திட்டார்.அதனைத்தொடர்ந்து கரைதுறைப்பற்று, துணுக்காய், புதுக்குடியிருப்பு ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்குரிய வேட்பு மனுப்பத்திரங்களை இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துரைராசா ரவிகரன் கையளித்தார்.முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள மாவீரன் பண்டாரவன்னியன் சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு குறித்த வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்டன.அத்தோடு இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் மாந்தை கிழக்கு உள்ளூராட்சி மன்றத்திற்குரிய வேட்புமனு பத்திரம் நாளையதினம் (20.03.2025) கையளிக்கப்படுமென இதன்போது தெரிவிக்கப்பட்டது.இந் நிகழ்வில் பெருந்திரளான இலங்கைத் தமிழரசுக்கட்சித் தொண்டர்கள் மற்றும், உள்ளூராட்சிமன்ற வேட்பாளர்கள் என பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement