சுமந்திரன், சிறிதரன் தரப்புக்கும் எமக்கும் தொடர்பில்லை என சுயேட்சைக்குழுவில் கரைச்சி பிரதேச சபைக்கு போட்டியிடும் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை இன்று அறிவித்துள்ளது.
இன்று கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் தலைவர் முன்நாள் உபதவிசாளர் வடிவேல் நகுலேஸ்வரன் மற்றும் சுயேட்சைக்குழுத் தலைவர் ரீவன்சன் ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர்.
எமது சுயேட்சைக் குழுவில் கரைச்சி பிரதேச சபைக்காக இளைஞர்கள் களத்தில் இறங்கியுள்ளன. இந்த தேர்தலில் மக்களின் அடிப்படைத் தேவைகளான வீதி, கழிவகற்றல் போன்ற தேவைகளை முறையாக பூர்த்தி செல்வதே எமது நோக்கமாகும்.
எமது இளைகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மக்கள் இளம் தலைமுறையை விரும்புகின்றனர்.
எம்மை சுமந்திரன் அணி என விமர்சிக்கின்றார்கள். தமது தோல்வியை சகிக்க முடியாமல் இவ்வாறு கூறுகின்றனர்.
உண்மையில், தமிழரசுக் கட்சியினரே சுமந்திரன் சிறிதரன் அணியினர். 15 ஆண்டுகளுக்கு மேல் தமது சுயலாப அரசியலை அவர்கள் செய்து வந்தனர். தமிழரசுக் கட்சிக்கு பொதுச் செயலாளரே சுமத்திரன்
எமக்கு அவர் பொதுச் செயலாளர் இல்லை. நாம் மக்களுக்கு சேவை செய்ய முன்வந்தவர்கள். தமிழரசுக் கட்சியினர் தமது சுயலாபத்தையே குறிக்கோளாகக் கொண்டவர்கள்.
நடப்பது உள்ளுராட்சித் தேர்தல். ஐநாவில் பேசுவோம் என மீண்டும் பொய் சொல்வார்கள். உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கும் ஐநாக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை.
தமிழ்த் தேசிய உணர்வுடனேயே எமது பயணமும் இருக்கிறது. எமக்கும் ஒரு தடவை சந்தர்ப்பத்தை இளைஞர் சக்திக்கு வழங்க வேண்டும்.
பொய் சொல்லிச் சொல்லி ஏமாற்றுபவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாக்களிப்பதிலிருந்து விலகி எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.
கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற மன நிலையிலிருந்து மக்கள் விலகி,
உண்மையான சேவை வழங்கக்கூடியவர்களை அடையாளம் கண்டு வாக்களித்து தமிழ்த் தேசியத்துடன் அபிவிருத்தியை முன்னெடுக்கும் சிந்தனை உள்ள எமது இளைஞர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
சுமந்திரன், சிறிதரன் தரப்புக்கும் எமக்கும் தொடர்பில்லை என தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை அறிவிப்பு சுமந்திரன், சிறிதரன் தரப்புக்கும் எமக்கும் தொடர்பில்லை என சுயேட்சைக்குழுவில் கரைச்சி பிரதேச சபைக்கு போட்டியிடும் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை இன்று அறிவித்துள்ளது.இன்று கிளிநொச்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் தலைவர் முன்நாள் உபதவிசாளர் வடிவேல் நகுலேஸ்வரன் மற்றும் சுயேட்சைக்குழுத் தலைவர் ரீவன்சன் ஆகியோர் இவ்வாறு தெரிவித்தனர்.எமது சுயேட்சைக் குழுவில் கரைச்சி பிரதேச சபைக்காக இளைஞர்கள் களத்தில் இறங்கியுள்ளன. இந்த தேர்தலில் மக்களின் அடிப்படைத் தேவைகளான வீதி, கழிவகற்றல் போன்ற தேவைகளை முறையாக பூர்த்தி செல்வதே எமது நோக்கமாகும்.எமது இளைகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. மக்கள் இளம் தலைமுறையை விரும்புகின்றனர். எம்மை சுமந்திரன் அணி என விமர்சிக்கின்றார்கள். தமது தோல்வியை சகிக்க முடியாமல் இவ்வாறு கூறுகின்றனர். உண்மையில், தமிழரசுக் கட்சியினரே சுமந்திரன் சிறிதரன் அணியினர். 15 ஆண்டுகளுக்கு மேல் தமது சுயலாப அரசியலை அவர்கள் செய்து வந்தனர். தமிழரசுக் கட்சிக்கு பொதுச் செயலாளரே சுமத்திரன்எமக்கு அவர் பொதுச் செயலாளர் இல்லை. நாம் மக்களுக்கு சேவை செய்ய முன்வந்தவர்கள். தமிழரசுக் கட்சியினர் தமது சுயலாபத்தையே குறிக்கோளாகக் கொண்டவர்கள்.நடப்பது உள்ளுராட்சித் தேர்தல். ஐநாவில் பேசுவோம் என மீண்டும் பொய் சொல்வார்கள். உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கும் ஐநாக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை.தமிழ்த் தேசிய உணர்வுடனேயே எமது பயணமும் இருக்கிறது. எமக்கும் ஒரு தடவை சந்தர்ப்பத்தை இளைஞர் சக்திக்கு வழங்க வேண்டும்.பொய் சொல்லிச் சொல்லி ஏமாற்றுபவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாக்களிப்பதிலிருந்து விலகி எமக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற மன நிலையிலிருந்து மக்கள் விலகி, உண்மையான சேவை வழங்கக்கூடியவர்களை அடையாளம் கண்டு வாக்களித்து தமிழ்த் தேசியத்துடன் அபிவிருத்தியை முன்னெடுக்கும் சிந்தனை உள்ள எமது இளைஞர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.