• Nov 14 2024

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வீறுகொண்டு எழுவார்கள்- அன்னராசா தெரிவிப்பு

Sharmi / Aug 1st 2024, 3:54 pm
image

இவ்வருடம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீறுகொண்டு எழுவார்கள் என வடமாகாண மீனவ பிரதிநிதி அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று(01)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்போது நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலிலே  தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற தமிழ் சிவில் சமூக அமைப்புகள் எடுத்த முயற்சியிலே வட கிழக்கு பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழர்களாக வாழ விரும்புகின்றவர்களும்,  எங்களுடைய ஏதிர்கால  வரலாற்றை கருத்தில் கொண்டு இந்த பொது  வேட்பாளர் என்கின்ற இந்த தீர்மானத்தை முன்னகர்த்திக்  கொண்டிருக்கின்றோம்.

இதிலே பல வாதப்பிரதிவாதங்களை வெளியிலிருந்து வைக்கின்றார்கள்.  நாங்கள் ஒரு சிவில் அமைப்பாக கேட்பது  என்னதான் இருந்தாலும் பெட்டி மாற்றுவதோ அல்லது பெட்டி  கொடுப்பதோ என்னவாக இருந்தாலும் பொது வேட்பாளர் என்கின்ற மேடைக்குள்  வாருங்கள்.

எல்லோரும் ஒன்று படுவோம்.ஏன் பெட்டி மாற்றுவது என்று வெளியிலிருந்து சொல்கிறீர்கள். உள்ளே  வாருங்கள்.

உள்ளே வந்து பெட்டியை  மாற்றாமல் எமது உரிமை சார்ந்த  விடயங்களை பேசுவோம். 

ஏன் பெட்டி மாற்றுகின்ற விடயங்களை வெளியே நின்று சொல்கிறீர்கள், உள்ளே வந்து பெட்டி மாற்றாமல் எங்களுடைய உரிமை சார்ந்த விடயங்களையும், இந்த ஜனாதிபதி தேர்தலில் ஒருமுறை தமிழ் பொது  வேட்பாளருக்கு  வாக்களித்து தமிழ்  மக்களுடைய ஒற்றுமையை நிலை நாட்டுவோம்.

சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் இந்த தமிழ் பொது வேட்பாளர் கட்டமைப்பை பிரிக்க நினைப்பதை விட, எங்களுடைய மக்களின் எங்களுடைய  வாக்குகளால் வந்த நீங்கள் ஏன் பிரிக்க நினைக்கிறீர்கள்? 

நீங்களும் தமிழர்கள்தானே தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் முன்னெடுக்கின்ற செயற்பாடுகளோடு நீங்களும் இணையுங்கள். நீங்கள் இணைந்து உங்களுடைய கருத்துக்களை முன் வையுங்கள். இந்த பெட்டி மாற்றம் என்கிற விடயத்தை நீங்கள் தடுங்களன்.

இந்த பெட்டி மாற்றுவதை தடுத்து அதில் இணையாமல் வெறுமனே வெளியே  நின்று குரல் கொடுப்பது எங்களுடைய தமிழ் சமூகத்தை சீரழிப்பதான ஒரு நிகழ்ச்சியாகத்தான் இருக்கின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களாகவிருந்தாலும் சரி,  கட்சித் தலைவர்களாக  இருந்தாலும் சரி ஏனைய சிவில் அமைப்புகளாக இருந்தாலும் சரி பிழை பிழை என்று  நீங்கள் வெளியிலிருந்து கதைக்க கூடாது. உள்ளே வாருங்கள் இன்று வடக்கு கிழக்கிலே நூற்றுக்கு மேற்பட்ட பொது அமைப்புகள் இணைந்து இந்த வேலையை செய்து கொண்டிருக்கின்றன.

இதிலே பல பொது அமைப்புகள்,  பல கட்சிகள் இணைந்திருக்கின்றன. ஒரு தமிழன் ஜனாதிபதி தேர்தலில் வெல்ல முடியாது என்று தெரிந்தும் எங்களுடைய ஒற்றுமையை ஒன்றுபட்டு சர்வதேசத்திற்கு காட்ட வேண்டும். உலகத்திற்கு காட்ட வேண்டும் என்பதற்கு அப்பால

நாங்கள் இனிவரும் காலங்களில் இந்த தேர்தலிலே ஒன்றுபட்டு நிற்போம் என்கின்ற எங்களுடைய பொது மக்கள் கட்டமைப்பில் நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, எதிர்காலத்திலே ஒஅராளுமன்ற தேர்தல் ஒன்று வந்தால் கடந்த காலங்களைப் போன்று 15க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழர்கள் நாங்கள் வெல்வதற்குரிய அடிப்படையாக இந்த தமிழ் பொது வேட்பாளர் கட்டமைப்பு இருக்கும்.

அதற்கு நீங்கள் வெளியில் என்று இதனை விமர்சிப்பதை விடுத்து நீங்களும் ஒரு தமிழர். தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். இந்த சிவில் கட்டமைப்புக்குள்  நீங்கள் வாருங்கள்.  உங்களை நாங்கள்  அழைத்துக் கொண்டிருக்கின்ற  போதும்  நீங்கள் முடிவெடுக்கின்றோம்,  முடிவெடுக்கின்றோம் என்று கடைசி வரைக்கும் நின்று தென் இலங்கை வேட்பாளர் ஒருவரை தான்  ஆதரிப்பீர்கள் என்ற ஐயம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த ஐயப்பாட்டில் இருந்து தமிழ் சமூகம் சிதைந்து கொள்ளாமல்,  இப்போதைய ஜனாதிபதியாக இருக்கின்றவர் கடந்த காலத்திலே ஒரு வசனத்தை அடிக்கடி கூறுவார்.

தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாருங்கள்  உங்களுக்கு தீர்வைத் தருகிறோம் என்று.

ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு பிரச்சனைகளை கொண்டு வந்த முன்வைக்கிறீர்கள்.  இந்த குற்றச்சாட்டு ஜனாதிபதியால்  வைக்கப்பட்டிருந்தது.

அந்த குற்றச்சாட்டுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு நீங்கள் வடக்கிழக்க தமிழர்கள்,  தமிழ் சிவில் சமூகங்கள், அரசியல் கட்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒரு குடையின் கீழ் வாருங்கள்.

எல்லோருக்கும் பிரச்சனை இருக்கின்றது. ஆனால் தமிழ்  பொது வேட்பாளரை  ஆதரிக்க கட்சி வேறுபாடின்றி  பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரு  குடையின் கீழ் வரவேண்டும் என்று நாங்கள் வடக்கு கிழக்கு சிவில்  சமூகமாக உங்களிடம் வேண்டுகிறோம்.

வெளியே நின்று மாற்று கருத்தை கூறி தமிழனே தமிழனை சிதவு படுத்துகின்ற, பின்னோக்கி தள்ளுகின்ற செயற்பாடுகளை  இந்த தேர்தல் காலத்திலே நீங்கள் மேற்கொள்ளாது இருங்கள்.

தமிழ் பொது வேட்பாளரை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் மௌனமாக இருங்கள். இந்த கட்சிகளும், தமிழ் சிவில் அமைப்புகளும் எடுத்த இந்த முடிவை நாங்கள் முன் கொண்டு செல்கின்றோம். 

நாங்கள் முப்பது வருட யுத்தத்தில் படாததும் இல்லை, அனுபவிக்காததும் இல்லை, இனி தமிழனுக்கு அனுபவிப்பதற்கு எதுவும் இல்லை.  ஆனால் இருப்பது ஒன்றுதான் நாங்கள் ஒற்றுமையாக மீண்டும் தமிழராய் நாம் ஒன்றுபட்டு வீறு கொண்டு எழுவோம்  என்பதை 2024 ஜனாதிபதி தேர்தல் அடியிட்ட காட்ட வேண்டும் என்கின்ற இந்த செய்தியை கூறி தமிழ் பொது பொது வேட்பாளருக்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் நான் இந்த வேளையிலே கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வீறுகொண்டு எழுவார்கள்- அன்னராசா தெரிவிப்பு இவ்வருடம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வீறுகொண்டு எழுவார்கள் என வடமாகாண மீனவ பிரதிநிதி அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழில் இன்று(01)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.வடக்கு கிழக்கு மாகாணங்களில் தற்போது நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலிலே  தமிழ் பொது வேட்பாளர் என்கின்ற தமிழ் சிவில் சமூக அமைப்புகள் எடுத்த முயற்சியிலே வட கிழக்கு பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழர்களாக வாழ விரும்புகின்றவர்களும்,  எங்களுடைய ஏதிர்கால  வரலாற்றை கருத்தில் கொண்டு இந்த பொது  வேட்பாளர் என்கின்ற இந்த தீர்மானத்தை முன்னகர்த்திக்  கொண்டிருக்கின்றோம்.இதிலே பல வாதப்பிரதிவாதங்களை வெளியிலிருந்து வைக்கின்றார்கள்.  நாங்கள் ஒரு சிவில் அமைப்பாக கேட்பது  என்னதான் இருந்தாலும் பெட்டி மாற்றுவதோ அல்லது பெட்டி  கொடுப்பதோ என்னவாக இருந்தாலும் பொது வேட்பாளர் என்கின்ற மேடைக்குள்  வாருங்கள்.எல்லோரும் ஒன்று படுவோம்.ஏன் பெட்டி மாற்றுவது என்று வெளியிலிருந்து சொல்கிறீர்கள். உள்ளே  வாருங்கள்.உள்ளே வந்து பெட்டியை  மாற்றாமல் எமது உரிமை சார்ந்த  விடயங்களை பேசுவோம். ஏன் பெட்டி மாற்றுகின்ற விடயங்களை வெளியே நின்று சொல்கிறீர்கள், உள்ளே வந்து பெட்டி மாற்றாமல் எங்களுடைய உரிமை சார்ந்த விடயங்களையும், இந்த ஜனாதிபதி தேர்தலில் ஒருமுறை தமிழ் பொது  வேட்பாளருக்கு  வாக்களித்து தமிழ்  மக்களுடைய ஒற்றுமையை நிலை நாட்டுவோம்.சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் இந்த தமிழ் பொது வேட்பாளர் கட்டமைப்பை பிரிக்க நினைப்பதை விட, எங்களுடைய மக்களின் எங்களுடைய  வாக்குகளால் வந்த நீங்கள் ஏன் பிரிக்க நினைக்கிறீர்கள் நீங்களும் தமிழர்கள்தானே தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் முன்னெடுக்கின்ற செயற்பாடுகளோடு நீங்களும் இணையுங்கள். நீங்கள் இணைந்து உங்களுடைய கருத்துக்களை முன் வையுங்கள். இந்த பெட்டி மாற்றம் என்கிற விடயத்தை நீங்கள் தடுங்களன்.இந்த பெட்டி மாற்றுவதை தடுத்து அதில் இணையாமல் வெறுமனே வெளியே  நின்று குரல் கொடுப்பது எங்களுடைய தமிழ் சமூகத்தை சீரழிப்பதான ஒரு நிகழ்ச்சியாகத்தான் இருக்கின்றது.பாராளுமன்ற உறுப்பினர்களாகவிருந்தாலும் சரி,  கட்சித் தலைவர்களாக  இருந்தாலும் சரி ஏனைய சிவில் அமைப்புகளாக இருந்தாலும் சரி பிழை பிழை என்று  நீங்கள் வெளியிலிருந்து கதைக்க கூடாது. உள்ளே வாருங்கள் இன்று வடக்கு கிழக்கிலே நூற்றுக்கு மேற்பட்ட பொது அமைப்புகள் இணைந்து இந்த வேலையை செய்து கொண்டிருக்கின்றன.இதிலே பல பொது அமைப்புகள்,  பல கட்சிகள் இணைந்திருக்கின்றன. ஒரு தமிழன் ஜனாதிபதி தேர்தலில் வெல்ல முடியாது என்று தெரிந்தும் எங்களுடைய ஒற்றுமையை ஒன்றுபட்டு சர்வதேசத்திற்கு காட்ட வேண்டும். உலகத்திற்கு காட்ட வேண்டும் என்பதற்கு அப்பாலநாங்கள் இனிவரும் காலங்களில் இந்த தேர்தலிலே ஒன்றுபட்டு நிற்போம் என்கின்ற எங்களுடைய பொது மக்கள் கட்டமைப்பில் நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, எதிர்காலத்திலே ஒஅராளுமன்ற தேர்தல் ஒன்று வந்தால் கடந்த காலங்களைப் போன்று 15க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழர்கள் நாங்கள் வெல்வதற்குரிய அடிப்படையாக இந்த தமிழ் பொது வேட்பாளர் கட்டமைப்பு இருக்கும்.அதற்கு நீங்கள் வெளியில் என்று இதனை விமர்சிப்பதை விடுத்து நீங்களும் ஒரு தமிழர். தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள். இந்த சிவில் கட்டமைப்புக்குள்  நீங்கள் வாருங்கள்.  உங்களை நாங்கள்  அழைத்துக் கொண்டிருக்கின்ற  போதும்  நீங்கள் முடிவெடுக்கின்றோம்,  முடிவெடுக்கின்றோம் என்று கடைசி வரைக்கும் நின்று தென் இலங்கை வேட்பாளர் ஒருவரை தான்  ஆதரிப்பீர்கள் என்ற ஐயம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.இந்த ஐயப்பாட்டில் இருந்து தமிழ் சமூகம் சிதைந்து கொள்ளாமல்,  இப்போதைய ஜனாதிபதியாக இருக்கின்றவர் கடந்த காலத்திலே ஒரு வசனத்தை அடிக்கடி கூறுவார்.தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாருங்கள்  உங்களுக்கு தீர்வைத் தருகிறோம் என்று.ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு பிரச்சனைகளை கொண்டு வந்த முன்வைக்கிறீர்கள்.  இந்த குற்றச்சாட்டு ஜனாதிபதியால்  வைக்கப்பட்டிருந்தது.அந்த குற்றச்சாட்டுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்கு நீங்கள் வடக்கிழக்க தமிழர்கள்,  தமிழ் சிவில் சமூகங்கள், அரசியல் கட்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஒரு குடையின் கீழ் வாருங்கள்.எல்லோருக்கும் பிரச்சனை இருக்கின்றது. ஆனால் தமிழ்  பொது வேட்பாளரை  ஆதரிக்க கட்சி வேறுபாடின்றி  பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒரு  குடையின் கீழ் வரவேண்டும் என்று நாங்கள் வடக்கு கிழக்கு சிவில்  சமூகமாக உங்களிடம் வேண்டுகிறோம்.வெளியே நின்று மாற்று கருத்தை கூறி தமிழனே தமிழனை சிதவு படுத்துகின்ற, பின்னோக்கி தள்ளுகின்ற செயற்பாடுகளை  இந்த தேர்தல் காலத்திலே நீங்கள் மேற்கொள்ளாது இருங்கள்.தமிழ் பொது வேட்பாளரை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் மௌனமாக இருங்கள். இந்த கட்சிகளும், தமிழ் சிவில் அமைப்புகளும் எடுத்த இந்த முடிவை நாங்கள் முன் கொண்டு செல்கின்றோம். நாங்கள் முப்பது வருட யுத்தத்தில் படாததும் இல்லை, அனுபவிக்காததும் இல்லை, இனி தமிழனுக்கு அனுபவிப்பதற்கு எதுவும் இல்லை.  ஆனால் இருப்பது ஒன்றுதான் நாங்கள் ஒற்றுமையாக மீண்டும் தமிழராய் நாம் ஒன்றுபட்டு வீறு கொண்டு எழுவோம்  என்பதை 2024 ஜனாதிபதி தேர்தல் அடியிட்ட காட்ட வேண்டும் என்கின்ற இந்த செய்தியை கூறி தமிழ் பொது பொது வேட்பாளருக்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் நான் இந்த வேளையிலே கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement