• Nov 14 2024

இலங்கை இராணுவத்தின் மீது கோபம் இருந்திருந்தால் தமிழர்கள் எனக்கு வாக்களித்திருக்க மாட்டார்கள் - சரத் பொன்சேகா பெருமிதம்...!

Anaath / Jul 16th 2024, 11:04 am
image

இலங்கை படையினர் மீது தமிழர்களுக்கு கோபமுள்ளதெனில் எனக்கு வாக்களித்திருக்க மாட்டார்கள் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நேற்று தென்மாகாணத்தில் இடம்பெற்றுள்ள சந்திப்பிலேயே  அவர் இதனை தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 “சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமையவே போர் நடத்தப்பட்டது. போரின் இறுதிக் கட்டத்தில் கனரக ஆயுதங் களைப் பயன்படுத்தவில்லை. மனிதா பிமான நடவடிக்கையின்போது (போர்) 40 ஆயிரம் சிவிலியன்கள் கொல்லப் பட்டனர் எனக் கூறப்படுவதை ஏற்க முடியாது. போரைத் திரிவுபடுத்திக்கூறி நன்மையடையும் சிலர் உள்ளனர். அவர்கள்தான் இவ்வாறான கருத்து களை முன்வைக்கின்றனர். போர் முடிவடைந்து 6 மாதங்களின் பின்னர் நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டேன். தமிழ் மக்கள் அமோக ஆதரவை வழங்கினர். மக்கள் அவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் இப்படிஆதரவு வழங்கி இருப்பார்களா? இராணுவத்தினர் மீது கோபம் இருந்திருந்தால் வாக்களித்திருப்பார்களா?

புலிகள் மக்களைப் பணயக்கைதிகளாக பிடித்து தமது இருப்பை தக்கவைக்க முற்பட்டனர். ஆனால், நாம் மக்களை பாதுகாத்து போரை முடித்தோம். போரின் இறுதிக் கட்டத்தில் 10, 15 கிலோமீட்டருக்குள் மக்கள் முடங்கியபோது நாம் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை. சிறு ஆயுதங்களை பயன்படுத்தியே போரிட்டோம். அதனால் தான் குறுகிய காலப்பகுதிக்குள் 2 ஆயிரம் படையினரை இழக்க நேரிட்டது.

போரின் முன்களத்தில் எவ்வித குற்றச்செயல்களும் இடம்பெறவில்லை. போர் முடிந்த பிறகு இடம்பெற்ற ஓரிரு சம்பவங்கள் உள்ளன. இருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அவை தொடர்பில் விசாரணைகளை ஆரம் பித்தேன். ஆனால், இரு மாதங்களில் நான் பதவி விலகிவிட்டதால் விசா ரணை தொடரவில்லை. எமக்கு இழப் புகள் ஏற்பட்டபோதும், இறுதிவரை நாம் சர்வதேச விதிமுறைகளின் பிரகாரமே போர் செய்தோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தின் மீது கோபம் இருந்திருந்தால் தமிழர்கள் எனக்கு வாக்களித்திருக்க மாட்டார்கள் - சரத் பொன்சேகா பெருமிதம். இலங்கை படையினர் மீது தமிழர்களுக்கு கோபமுள்ளதெனில் எனக்கு வாக்களித்திருக்க மாட்டார்கள் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.நேற்று தென்மாகாணத்தில் இடம்பெற்றுள்ள சந்திப்பிலேயே  அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமையவே போர் நடத்தப்பட்டது. போரின் இறுதிக் கட்டத்தில் கனரக ஆயுதங் களைப் பயன்படுத்தவில்லை. மனிதா பிமான நடவடிக்கையின்போது (போர்) 40 ஆயிரம் சிவிலியன்கள் கொல்லப் பட்டனர் எனக் கூறப்படுவதை ஏற்க முடியாது. போரைத் திரிவுபடுத்திக்கூறி நன்மையடையும் சிலர் உள்ளனர். அவர்கள்தான் இவ்வாறான கருத்து களை முன்வைக்கின்றனர். போர் முடிவடைந்து 6 மாதங்களின் பின்னர் நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டேன். தமிழ் மக்கள் அமோக ஆதரவை வழங்கினர். மக்கள் அவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் இப்படிஆதரவு வழங்கி இருப்பார்களா இராணுவத்தினர் மீது கோபம் இருந்திருந்தால் வாக்களித்திருப்பார்களாபுலிகள் மக்களைப் பணயக்கைதிகளாக பிடித்து தமது இருப்பை தக்கவைக்க முற்பட்டனர். ஆனால், நாம் மக்களை பாதுகாத்து போரை முடித்தோம். போரின் இறுதிக் கட்டத்தில் 10, 15 கிலோமீட்டருக்குள் மக்கள் முடங்கியபோது நாம் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை. சிறு ஆயுதங்களை பயன்படுத்தியே போரிட்டோம். அதனால் தான் குறுகிய காலப்பகுதிக்குள் 2 ஆயிரம் படையினரை இழக்க நேரிட்டது.போரின் முன்களத்தில் எவ்வித குற்றச்செயல்களும் இடம்பெறவில்லை. போர் முடிந்த பிறகு இடம்பெற்ற ஓரிரு சம்பவங்கள் உள்ளன. இருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அவை தொடர்பில் விசாரணைகளை ஆரம் பித்தேன். ஆனால், இரு மாதங்களில் நான் பதவி விலகிவிட்டதால் விசா ரணை தொடரவில்லை. எமக்கு இழப் புகள் ஏற்பட்டபோதும், இறுதிவரை நாம் சர்வதேச விதிமுறைகளின் பிரகாரமே போர் செய்தோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement