• Jan 26 2025

புகையிரத கடவை அருகில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு - மன்னாரில் சம்பவம்

Chithra / Jan 20th 2025, 8:23 am
image

 


மன்னார் - தோட்டக்காடு புகையிரத கடவையின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தில் குறித்த பெண் மோதி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த பெண் மன்னார் ஜீவபுரம் பகுதியில் வசித்து வந்துள்ள நிலையில் வெள்ளம் காரணமாக தற்காலிகமாக தோட்டக்காட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறித்த மரணம் தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


புகையிரத கடவை அருகில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு - மன்னாரில் சம்பவம்  மன்னார் - தோட்டக்காடு புகையிரத கடவையின் அருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.இன்று அதிகாலை 4.30 மணியளவில் தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்தில் குறித்த பெண் மோதி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுகுறித்த பெண் மன்னார் ஜீவபுரம் பகுதியில் வசித்து வந்துள்ள நிலையில் வெள்ளம் காரணமாக தற்காலிகமாக தோட்டக்காட்டில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.குறித்த மரணம் தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement

Advertisement

Advertisement