யாழ்ப்பாணம் -சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது.
செட்டி வீதி, இணுவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய அமுதலிங்கம் நிவேதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் வீட்டின் முன்புறம் உள்ள காணியில் நேற்று இரவு இருந்துள்ளார். இதன்போது இரவு உணவுக்காக அவரது தாயார் குறித்த இளைஞனை அழைத்துள்ளார்.
இதன்போது அவர் வருவதாக கூறினார், இருப்பினும் வீட்டுக்கு செல்லவில்லை.
பின்னர் உறவினர்கள் தொலைபேசி மூலம் அழைப்பு மேற்கொண்டவேளையும் தொடர்பு கிடைக்கவில்லை
இந்நிலையில் அவர் இன்றையதினம் வீட்டின் முன்னால் உள்ள காணியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக காணப்பட்டார்.
இந்நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து சுன்னாகம் பொலிசார் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் தூக்கில் தொங்கியவாறு இளைஞனின் சடலம் மீட்பு - மரணத்தில் சந்தேகம் உறவினர்கள் தெரிவிப்பு யாழ்ப்பாணம் -சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது. செட்டி வீதி, இணுவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய அமுதலிங்கம் நிவேதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த இளைஞன் வீட்டின் முன்புறம் உள்ள காணியில் நேற்று இரவு இருந்துள்ளார். இதன்போது இரவு உணவுக்காக அவரது தாயார் குறித்த இளைஞனை அழைத்துள்ளார். இதன்போது அவர் வருவதாக கூறினார், இருப்பினும் வீட்டுக்கு செல்லவில்லை.பின்னர் உறவினர்கள் தொலைபேசி மூலம் அழைப்பு மேற்கொண்டவேளையும் தொடர்பு கிடைக்கவில்லைஇந்நிலையில் அவர் இன்றையதினம் வீட்டின் முன்னால் உள்ள காணியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக காணப்பட்டார். இந்நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.இதையடுத்து சுன்னாகம் பொலிசார் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.