• Nov 19 2024

கீரிமலையில் புனிதத்தை பாதுகாக்க தெல்லிப்பழை சுகாதர வைத்திய அதிகாரி நடவடிக்கை!

Tamil nila / Mar 1st 2024, 8:11 pm
image

கீரிமலை நகுலேஸ்வரா் ஆலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள  பிரதேசத்தினை புகைத்தல் மற்றும் மதுபாவனையற்ற பிரதேசமாக பாதுகாக்கும் நோக்கில் தெல்லிப்பழை சுகாதர வைத்திய அதிகாரி   நந்தகுமாரினால்  விழிப்புணர்வு அறிவித்தல் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக  தற்சமயம்  கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில் சிவராத்திரி தினமான எதிர்வரும் 8 ம் திகதி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தில் வழமை போல் வழிபாடுகளில் ஈடுபடுவர்.

எனவே இவ் ஆலயம் மற்றும் அதனை  சூழ்ந்த  பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளாக வருகை தருபவர்கள் , ஆலய வழிபாட்டுக்கு வருகை தருபவர்கள் மற்றும் வியாபார  நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அனைவரும் இதனை கவனத்திலெடுத்து செயற்படுவதற்காகவே  இவ்வாறான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே இப் பிரதேசங்கள் தொடா்ச்சியாக கன்காணிக்கப்படும் என தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி   வலியுறுதியுள்ளார்.




கீரிமலையில் புனிதத்தை பாதுகாக்க தெல்லிப்பழை சுகாதர வைத்திய அதிகாரி நடவடிக்கை கீரிமலை நகுலேஸ்வரா் ஆலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள  பிரதேசத்தினை புகைத்தல் மற்றும் மதுபாவனையற்ற பிரதேசமாக பாதுகாக்கும் நோக்கில் தெல்லிப்பழை சுகாதர வைத்திய அதிகாரி   நந்தகுமாரினால்  விழிப்புணர்வு அறிவித்தல் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக  தற்சமயம்  கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில் சிவராத்திரி தினமான எதிர்வரும் 8 ம் திகதி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தில் வழமை போல் வழிபாடுகளில் ஈடுபடுவர்.எனவே இவ் ஆலயம் மற்றும் அதனை  சூழ்ந்த  பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளாக வருகை தருபவர்கள் , ஆலய வழிபாட்டுக்கு வருகை தருபவர்கள் மற்றும் வியாபார  நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் அனைவரும் இதனை கவனத்திலெடுத்து செயற்படுவதற்காகவே  இவ்வாறான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஆகவே இப் பிரதேசங்கள் தொடா்ச்சியாக கன்காணிக்கப்படும் என தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி   வலியுறுதியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement