• May 06 2024

வடக்கு உட்பட பல பகுதிகளில் இன்றும் அதிகரித்த வெப்பநிலை...! - மக்களுக்கு எச்சரிக்கை

Chithra / Apr 24th 2024, 7:52 am
image

Advertisement

 

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும்  வடமேல்  மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்தின்  சில இடங்களிலும்  பிற்பகல்  அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடியவாய்ப்புக் காணப்படுகின்றது. 

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது  மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 

ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு உட்பட பல பகுதிகளில் இன்றும் அதிகரித்த வெப்பநிலை. - மக்களுக்கு எச்சரிக்கை  வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மொனராகலை மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும்  வடமேல்  மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அனுராதபுரம் மாவட்டத்தின்  சில இடங்களிலும்  பிற்பகல்  அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடியவாய்ப்புக் காணப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 50 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது  மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement