• Oct 19 2024

தையிட்டியில் தொடரும் பதற்றம்! நள்ளிரவில் சிறைப்பிடிக்கப்பட்ட எம்.பி. மற்றும் சட்டத்தரணி..! உணவு வழங்க மறுத்த பொலிசார் !samugammedia

Chithra / May 4th 2023, 6:12 am
image

Advertisement

யாழ்.தையிட்டி பகுதியில் தற்போது நிலவும் பதற்றமாக சூழ்நிலையில், சட்டதரணி சுகாஸ்ற்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் குடித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக அங்கிருக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததையடுத்து அங்கு சட்டத்தரணிக்கும் பொலிஸாருக்கம் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரி சட்டத்தரணி சுகாஸ் அங்கு குடித்துவிட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்

யாழ்.தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராகவும், விகாரையை சூழ இருக்கின்ற தமிழர்களின் காணிகளை இராணுவத்தினரும் பொலிஸாரும் சேர்ந்து ஆக்கிரமிப்பதற்கு எதிராகவும் ஜனநாயக முறைக்கு கீழ் முன்னெடுக்கப்பட்ட போராட்டதில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி ந.காண்டீபன் இருவரையும் பொலிஸார் தனிப்படுத்தி  சிறைப்பிடித்து வைத்திருப்பதாக சட்டதரணி சுகாஸ் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட பலர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், நள்ளிரவு தாண்டியும் அவர்களுக்கு தேவையான உணவு, நீர் என்பன இதுவரை வழங்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் போராட்ட பகுதிக்குள் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட்ட நால்வர் இருக்கும் பகுதிக்கு செல்வதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், மேலிடத்திலிருந்து தமக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தின் கட்டளை இதுவெனவும் தெரிவித்து குறித்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்களை தடுக்க பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடமுற்பட்ட போது லத்தியினை காட்டி பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர். 

இதன் காரணமாக யாழ்.தையிட்டி பகுதியில் பதற்றமான சூழல் நிவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த பகுதிக்குள் ஊடகவியலாளர்கள் உட்பட பொதுமக்கள் யாரும் உள்நுழைய முடியாதவாறு பொலிஸார் வாகனங்களை வீதிக்கு குறுக்கே நிறுத்தி தடையேற்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி ந.காண்டீபன் உள்ளிட்ட சிலர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக போராட்ட பகுதிக்குள் இவர்கள் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த பகுதிக்கு சென்ற சட்டத்தரணி சுகாஸை போராட்ட பகுதிக்குள் நுழையவிடாது இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளதுடன், அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து போராட்டப்பகுதியினை சுற்றி இராணுவத்தினர் முள் வேலிகளை அமைத்து வருகின்றமையினால் அப்பகுதியில் பொதுமக்கள் அதிகளவு ஒன்றுக்கூடியுள்ளதுடன் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நிலவுவதாக தெரியவருகின்றது.

இன்று அதிகாலையே செல்வராஜா கயேந்திரன் மற்றும் 3 பேருக்கான உணவு மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீட்டினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது என தகவல் கிடைத்துள்ளது.


தையிட்டியில் தொடரும் பதற்றம் நள்ளிரவில் சிறைப்பிடிக்கப்பட்ட எம்.பி. மற்றும் சட்டத்தரணி. உணவு வழங்க மறுத்த பொலிசார் samugammedia யாழ்.தையிட்டி பகுதியில் தற்போது நிலவும் பதற்றமாக சூழ்நிலையில், சட்டதரணி சுகாஸ்ற்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.போராட்டக்காரர்கள் குடித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக அங்கிருக்கும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்ததையடுத்து அங்கு சட்டத்தரணிக்கும் பொலிஸாருக்கம் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.குறித்த பொலிஸ் அதிகாரி சட்டத்தரணி சுகாஸ் அங்கு குடித்துவிட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்யாழ்.தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிராகவும், விகாரையை சூழ இருக்கின்ற தமிழர்களின் காணிகளை இராணுவத்தினரும் பொலிஸாரும் சேர்ந்து ஆக்கிரமிப்பதற்கு எதிராகவும் ஜனநாயக முறைக்கு கீழ் முன்னெடுக்கப்பட்ட போராட்டதில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி ந.காண்டீபன் இருவரையும் பொலிஸார் தனிப்படுத்தி  சிறைப்பிடித்து வைத்திருப்பதாக சட்டதரணி சுகாஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட பலர் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், நள்ளிரவு தாண்டியும் அவர்களுக்கு தேவையான உணவு, நீர் என்பன இதுவரை வழங்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் போராட்ட பகுதிக்குள் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட்ட நால்வர் இருக்கும் பகுதிக்கு செல்வதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.மேலும், மேலிடத்திலிருந்து தமக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தின் கட்டளை இதுவெனவும் தெரிவித்து குறித்த பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.ஊடகவியலாளர்களை தடுக்க பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கலந்துரையாடமுற்பட்ட போது லத்தியினை காட்டி பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக யாழ்.தையிட்டி பகுதியில் பதற்றமான சூழல் நிவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் குறித்த பகுதிக்குள் ஊடகவியலாளர்கள் உட்பட பொதுமக்கள் யாரும் உள்நுழைய முடியாதவாறு பொலிஸார் வாகனங்களை வீதிக்கு குறுக்கே நிறுத்தி தடையேற்படுத்தியுள்ளனர்.இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி ந.காண்டீபன் உள்ளிட்ட சிலர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாக போராட்ட பகுதிக்குள் இவர்கள் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், குறித்த பகுதிக்கு சென்ற சட்டத்தரணி சுகாஸை போராட்ட பகுதிக்குள் நுழையவிடாது இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளதுடன், அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து போராட்டப்பகுதியினை சுற்றி இராணுவத்தினர் முள் வேலிகளை அமைத்து வருகின்றமையினால் அப்பகுதியில் பொதுமக்கள் அதிகளவு ஒன்றுக்கூடியுள்ளதுடன் தொடர்ந்தும் பதற்றமான சூழல் நிலவுவதாக தெரியவருகின்றது.இன்று அதிகாலையே செல்வராஜா கயேந்திரன் மற்றும் 3 பேருக்கான உணவு மனித உரிமை ஆணைக்குழுவின் தலையீட்டினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது என தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement