• Apr 30 2024

திருமலையில் பதற்றம்..! அத்துமீறிய பெரும்பான்மையினர் - வேடிக்கை பார்த்த முப்படை! samugammedia

Chithra / May 14th 2023, 3:13 pm
image

Advertisement

திருகோணமலை மணிக்கூட்டுக்கோபுரத்தில் இன்று (14)  ஒன்றுகூடிய சிங்கள மக்கள் பௌத்த தேரர்கள் தலைமை தாங்க ஊர்வலமாக வந்து நெல்சன் தியேட்டருக்கு முன்னால் உள்ள அடைக்கப்பட்ட பகுதிக்குள் அத்தமீறி நுழைந்து சமய அனுட்டானங்களை மேற்கொண்ட நிலையில் திருகோணமலை நகரப்பகுதியில் பதட்ட நிலை யொன்று உருவாகியது.

தமிழ் மக்கள் பேரவையினர் நேற்று காலை தொடக்கம் இன்று காலை வரை நெல்சன் தியேட்டருக்கு முன்னால் உள்ள தொல்பொருள் திணைக்ளம் அடையாளப்படுத்தியிருந்த நிலத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு

போராட்ட மொன்றை நடத்தியதோடு, இன்று காலையில் குறித்த பௌத்த  நிகழ்ச்சி நடைபெறவில்லை என்பதை உறுத்திப்படுத்திக் கொண்டு ஊடகங்களுக்கு பேட்டி வழங்கியதுடன், குறித்த இடத்திலிருந்து கலைந்து சென்றுள்ளனர். 

இந்த சம்பவம் நடைபெற்றபோது யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், தமிழ் மக்கள் பேரவையை சேர்ந்த சட்டத்தரணிகளான காண்டீபன் சுகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர். 

இவர்கள் கலைந்து சென்ற சில நிமிட நேரத்தில் மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து தேரர்கள் தலைமையில் அணிவகுத்து வந்த 2000 மேற்பட்டவர்கள், நெல்சன் தியேட்டருக்கு முன்னால் உள்ள காணிக்குள் அத்தமீறி நுழைந்து பௌத்த தேரர்கள் பிரித்தோதியதுடன் சிங்கள மக்கள் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.

இவ்வேளையில் தமிழ் மக்கள் கலகத்துக்கு பயந்து  அவ்விடத்தை விட்டு விலகி சென்றனர். வந்தவர்கள் தங்களை தாக்கக்கூடும் என்ற பீதியில் குறித்த இடத்தலிருந்து விலத்தி சென்றனர்.

பொலிஸார் வந்தவர்களை தடுக்க முற்பட்டபோதிலும் அது முடியாமல் போன நிலையில் அத்துமீறியவர்கள் வளவுக்குள் புகுந்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இதில் பெண்கள் ஆண்கள் பௌத்த தேரர்கள் என 2000 மேற்பட்டவர்கள் வருகை தந்திருந்தனர்.

தாய்லாந்திலிருந்து வந்திருக்கும் பௌத்த தேரர்கள் நெல்சன் தியேட்டருக்கு முன்னுள்ள அரச மரத்தடிக்கு வந்து புத்தர் சிலையொன்றை வைத்து வழிபட்டு பிரித்தோதி அங்கிருந்து கண்டிக்கு பாதயாத்திரை செய்வதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மேற்படி நிகழ்வை இந்து ஆலயமான வில்லூன்றி கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மேற்கொள்ள வேண்டாமென திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பின் இரா. சம்பந்தன் மற்றும் பொது அமைப்புக்கள், இந்து அமைப்புக்கள் கோரியதற்கு அமைய மேற்படி பௌத்த வழிபாடு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது என திருகோணமலை மாவட்ட அரச அதிபர் ஜெய விக்கிரம வாக்குறுதி அளித்தார்.

அவ்வாறான சூழ்நிலையில் குறித்த இடத்தை சுற்றி பறக்கவிடப்பட்டிருக்கும் கொடிகளை அகற்றவேண்டுமென்ற  கோரிக்கை கனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியவர்களால் விடுக்கப்பட்டிருந்தது. 

கொடிகள் அகற்றாத நிலையில் போராட்டகாரார்கள் சம்பவம் நடைபெற திட்டமிடப்பட்ட நேரம் வரை தமது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவதென முடிவு செய்து இன்று காலை கலைந்து சென்றதன்பின் குறித்த தரப்பினர் மணிக்கூட்டு கோபுரத்தடியிலிருந்து ஊர்வலமாக வந்து அத்துமீறி நழைந்ததுடன் தியேட்டருக்கு முன்னுள்ள அரச மரமொன்றின் கீழ் வழிபாடுகளை மேற் கொண்டு பௌத்த கொடிகளை மரத்தை சற்றி அணிந்து விட்டு சென்றுள்ளனர். 

அதன்பின் அவ்வித்தில் விசேட இராணுவப்பிரிவினர் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.


திருமலையில் பதற்றம். அத்துமீறிய பெரும்பான்மையினர் - வேடிக்கை பார்த்த முப்படை samugammedia திருகோணமலை மணிக்கூட்டுக்கோபுரத்தில் இன்று (14)  ஒன்றுகூடிய சிங்கள மக்கள் பௌத்த தேரர்கள் தலைமை தாங்க ஊர்வலமாக வந்து நெல்சன் தியேட்டருக்கு முன்னால் உள்ள அடைக்கப்பட்ட பகுதிக்குள் அத்தமீறி நுழைந்து சமய அனுட்டானங்களை மேற்கொண்ட நிலையில் திருகோணமலை நகரப்பகுதியில் பதட்ட நிலை யொன்று உருவாகியது.தமிழ் மக்கள் பேரவையினர் நேற்று காலை தொடக்கம் இன்று காலை வரை நெல்சன் தியேட்டருக்கு முன்னால் உள்ள தொல்பொருள் திணைக்ளம் அடையாளப்படுத்தியிருந்த நிலத்துக்கு முன்பாக கவனயீர்ப்புபோராட்ட மொன்றை நடத்தியதோடு, இன்று காலையில் குறித்த பௌத்த  நிகழ்ச்சி நடைபெறவில்லை என்பதை உறுத்திப்படுத்திக் கொண்டு ஊடகங்களுக்கு பேட்டி வழங்கியதுடன், குறித்த இடத்திலிருந்து கலைந்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் நடைபெற்றபோது யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன், தமிழ் மக்கள் பேரவையை சேர்ந்த சட்டத்தரணிகளான காண்டீபன் சுகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர். இவர்கள் கலைந்து சென்ற சில நிமிட நேரத்தில் மணிக்கூட்டு கோபுரத்திலிருந்து தேரர்கள் தலைமையில் அணிவகுத்து வந்த 2000 மேற்பட்டவர்கள், நெல்சன் தியேட்டருக்கு முன்னால் உள்ள காணிக்குள் அத்தமீறி நுழைந்து பௌத்த தேரர்கள் பிரித்தோதியதுடன் சிங்கள மக்கள் வழிபாடுகளிலும் ஈடுபட்டனர்.இவ்வேளையில் தமிழ் மக்கள் கலகத்துக்கு பயந்து  அவ்விடத்தை விட்டு விலகி சென்றனர். வந்தவர்கள் தங்களை தாக்கக்கூடும் என்ற பீதியில் குறித்த இடத்தலிருந்து விலத்தி சென்றனர்.பொலிஸார் வந்தவர்களை தடுக்க முற்பட்டபோதிலும் அது முடியாமல் போன நிலையில் அத்துமீறியவர்கள் வளவுக்குள் புகுந்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.இதில் பெண்கள் ஆண்கள் பௌத்த தேரர்கள் என 2000 மேற்பட்டவர்கள் வருகை தந்திருந்தனர்.தாய்லாந்திலிருந்து வந்திருக்கும் பௌத்த தேரர்கள் நெல்சன் தியேட்டருக்கு முன்னுள்ள அரச மரத்தடிக்கு வந்து புத்தர் சிலையொன்றை வைத்து வழிபட்டு பிரித்தோதி அங்கிருந்து கண்டிக்கு பாதயாத்திரை செய்வதாக திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மேற்படி நிகழ்வை இந்து ஆலயமான வில்லூன்றி கந்தசாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் மேற்கொள்ள வேண்டாமென திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பின் இரா. சம்பந்தன் மற்றும் பொது அமைப்புக்கள், இந்து அமைப்புக்கள் கோரியதற்கு அமைய மேற்படி பௌத்த வழிபாடு வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது என திருகோணமலை மாவட்ட அரச அதிபர் ஜெய விக்கிரம வாக்குறுதி அளித்தார்.அவ்வாறான சூழ்நிலையில் குறித்த இடத்தை சுற்றி பறக்கவிடப்பட்டிருக்கும் கொடிகளை அகற்றவேண்டுமென்ற  கோரிக்கை கனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியவர்களால் விடுக்கப்பட்டிருந்தது. கொடிகள் அகற்றாத நிலையில் போராட்டகாரார்கள் சம்பவம் நடைபெற திட்டமிடப்பட்ட நேரம் வரை தமது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவதென முடிவு செய்து இன்று காலை கலைந்து சென்றதன்பின் குறித்த தரப்பினர் மணிக்கூட்டு கோபுரத்தடியிலிருந்து ஊர்வலமாக வந்து அத்துமீறி நழைந்ததுடன் தியேட்டருக்கு முன்னுள்ள அரச மரமொன்றின் கீழ் வழிபாடுகளை மேற் கொண்டு பௌத்த கொடிகளை மரத்தை சற்றி அணிந்து விட்டு சென்றுள்ளனர். அதன்பின் அவ்வித்தில் விசேட இராணுவப்பிரிவினர் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

Advertisement

Advertisement

Advertisement