• May 21 2024

இலங்கையில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை? நேரமும் அதிகரிப்பு..? வெளியான அறிவிப்பு

Chithra / May 14th 2023, 3:28 pm
image

Advertisement


தினசரி வேலை நேரத்தை 8 மணித்தியாலங்களிலிருந்து 12 மணித்தியாலங்களாக அதிகரிப்பதுடன், வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக சில  தொழிற்சங்கங்கள் முன்வைத்த குற்றச்சாட்டை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்  மனுஷ நாணயக்கார மறுத்துள்ளார்.

தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்டுள்ள குறித்த கருத்துகள் தவறானவையாகும். இது தொடர்பில் பொதுக்கலந்தாய்வு ஒன்றை ஆரம்பித்துள்ளோம். 


அதன்பின் தான் ஒரு முன்மொழிவை உருவாக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, நாளொன்றிற்கு வேலை நேரத்தை 8 மணித்தியாலத்திலிருந்து 12 மணித்தியாலங்களாக அதிகரிப்பதுடன் வாரத்திற்கு வேலை நாட்களை 4 ஆக மாற்ற அரசாங்கம் திட்டமிடுவதாக, சுதந்திர வர்த்தக மண்டல தொழிலாளர் கூட்டுத் தொழிற்சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்க்கஸ் தெரிவித்திருந்தார்.

தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் இப்போது அனுபவித்து வரும் சலுகைகளை இழந்து விடுவார்கள். அனைத்துத் தொழிலாளர்களும் இதைத் தடுக்க முன்வர வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை நேரமும் அதிகரிப்பு. வெளியான அறிவிப்பு தினசரி வேலை நேரத்தை 8 மணித்தியாலங்களிலிருந்து 12 மணித்தியாலங்களாக அதிகரிப்பதுடன், வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளதாக சில  தொழிற்சங்கங்கள் முன்வைத்த குற்றச்சாட்டை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்  மனுஷ நாணயக்கார மறுத்துள்ளார்.தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்டுள்ள குறித்த கருத்துகள் தவறானவையாகும். இது தொடர்பில் பொதுக்கலந்தாய்வு ஒன்றை ஆரம்பித்துள்ளோம். அதன்பின் தான் ஒரு முன்மொழிவை உருவாக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.இதற்கு முன்னதாக, நாளொன்றிற்கு வேலை நேரத்தை 8 மணித்தியாலத்திலிருந்து 12 மணித்தியாலங்களாக அதிகரிப்பதுடன் வாரத்திற்கு வேலை நாட்களை 4 ஆக மாற்ற அரசாங்கம் திட்டமிடுவதாக, சுதந்திர வர்த்தக மண்டல தொழிலாளர் கூட்டுத் தொழிற்சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்க்கஸ் தெரிவித்திருந்தார்.தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் இப்போது அனுபவித்து வரும் சலுகைகளை இழந்து விடுவார்கள். அனைத்துத் தொழிலாளர்களும் இதைத் தடுக்க முன்வர வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement