• May 17 2024

யாழில் பயங்கரம்...! முகமூடிகளுடன் வீட்டுக்குள் இறங்கிய கும்பலால் பரபரப்பு...!samugammedia

Sharmi / Aug 26th 2023, 3:06 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பாற்பண்ணை பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் இன்று அதிகாலை 2 மணிளவில் வீட்டின் கூரையை பிரித்து முகமூடி அணிந்தவாறு வீட்டிற்குள் இறங்கிய மூவரடங்கிய கும்பல் வீட்டில் உறக்கத்தில் இருந்தவரை தட்டி எழுப்பி  இரண்டு கைகளையும் கயிற்றினால் கட்டிவைத்து கழுத்தில் கத்தினை வைத்து எங்கே நகையுள்ளது என மிரட்டி அரை மணி நேரமாக குறித்த கும்பல் அடாவடி புரிந்துள்ளது.

எனினும் குறித்த நபர் கூக்குரல் இட்டு அயலவர்கள் வீட்டு விளக்கை ஒளிர விட்டதன் காரணமாக அச்சுறுத்திய கும்பல் தாங்கள் கொண்டு வந்த பெரிய கத்தியினையும் விட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான கோப்பாய்  குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .

இதே போன்று நேற்று முன்தினம் கல்வியங்காடு பகுதியில் கிறிஸ்தவ மதகுரு ஒருவரை கத்திகாட்டிஅச்சுறுத்தி பணம் திருடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


யாழில் பயங்கரம். முகமூடிகளுடன் வீட்டுக்குள் இறங்கிய கும்பலால் பரபரப்பு.samugammedia யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பாற்பண்ணை பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் இன்று அதிகாலை 2 மணிளவில் வீட்டின் கூரையை பிரித்து முகமூடி அணிந்தவாறு வீட்டிற்குள் இறங்கிய மூவரடங்கிய கும்பல் வீட்டில் உறக்கத்தில் இருந்தவரை தட்டி எழுப்பி  இரண்டு கைகளையும் கயிற்றினால் கட்டிவைத்து கழுத்தில் கத்தினை வைத்து எங்கே நகையுள்ளது என மிரட்டி அரை மணி நேரமாக குறித்த கும்பல் அடாவடி புரிந்துள்ளது.எனினும் குறித்த நபர் கூக்குரல் இட்டு அயலவர்கள் வீட்டு விளக்கை ஒளிர விட்டதன் காரணமாக அச்சுறுத்திய கும்பல் தாங்கள் கொண்டு வந்த பெரிய கத்தியினையும் விட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான கோப்பாய்  குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .இதே போன்று நேற்று முன்தினம் கல்வியங்காடு பகுதியில் கிறிஸ்தவ மதகுரு ஒருவரை கத்திகாட்டிஅச்சுறுத்தி பணம் திருடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement