• Dec 13 2024

யாழில் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது!

Tamil nila / Nov 29th 2024, 6:56 pm
image

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர்  பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  இணுவில் மேற்கு, சுன்னாகம் பொலிஸ் பிரிவு, சுன்னாகம் முகவரியில் வசிக்கும் மனோகரன் கஜந்தரூபன் என்பவர் யாழ்ப்பாணப் பயங்கரவாத பிரிவு அதிகாரிகளால் அவரது இல்லத்தில் வைத்து இன்று  கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவரது முகநூல் பதிவொன்று தொடர்பிலான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர் 30.11.2024 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

சந்தேகத்தின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின்னர் இவ்வாறு  கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர்  பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  இணுவில் மேற்கு, சுன்னாகம் பொலிஸ் பிரிவு, சுன்னாகம் முகவரியில் வசிக்கும் மனோகரன் கஜந்தரூபன் என்பவர் யாழ்ப்பாணப் பயங்கரவாத பிரிவு அதிகாரிகளால் அவரது இல்லத்தில் வைத்து இன்று  கைது செய்யப்பட்டுள்ளனர்.அவரது முகநூல் பதிவொன்று தொடர்பிலான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.குறித்த சந்தேக நபர் 30.11.2024 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.சந்தேகத்தின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின்னர் இவ்வாறு  கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement