பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுக அதிகாரசபை வளாகத்தில் இன்று இடம்பெற்ற தாக்குதலில் எட்டுபேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு பயங்கரவாதிகள் குவாடர் துறைமுக வளாகத்தை சுற்றிவளைத்ததாகவும், அவர்கள் அனைவரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாகவும் X பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், வன்முறையைப் பயன்படுத்த விரும்பும் எவரும் அரசின் கருணையைப் பார்க்க மாட்டார்கள். பாகிஸ்தானுக்காக இன்று துணிச்சலுடன் போராடிய அனைத்து சட்ட அமலாக்க வீரர்களுக்கும் பாராட்டுக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தனது அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது என்றும் அவர் கூறியுள்ளார்
குவாடர் துறைமுகத்தை சுற்றிவளைத்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுக அதிகாரசபை வளாகத்தில் இன்று இடம்பெற்ற தாக்குதலில் எட்டுபேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எட்டு பயங்கரவாதிகள் குவாடர் துறைமுக வளாகத்தை சுற்றிவளைத்ததாகவும், அவர்கள் அனைவரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாகவும் X பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், வன்முறையைப் பயன்படுத்த விரும்பும் எவரும் அரசின் கருணையைப் பார்க்க மாட்டார்கள். பாகிஸ்தானுக்காக இன்று துணிச்சலுடன் போராடிய அனைத்து சட்ட அமலாக்க வீரர்களுக்கும் பாராட்டுக்கள் எனத் தெரிவித்துள்ளார்.எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தனது அரசாங்கம் பொறுத்துக் கொள்ளாது என்றும் அவர் கூறியுள்ளார்