• May 17 2024

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தைப்பொங்கல் விழா!

Sharmi / Jan 12th 2023, 11:54 pm
image

Advertisement

கொழும்புத்  தமிழ்ச் சங்க தலைவர் சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் தலைமையில் 2023.01.15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு “தைப்பொங்கல் விழா”  கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

சைவ மங்கையர் வித்தியாலய மாணவிகளின் வரவேற்பு நடனத்தை தொடர்ந்து,  “உணர்வுகளின் அறுவடை உழவர் திருநாள்” எனும் தலைப்பில் கொழும்புத் தமிழ்ச் சங்க ஆயுள் உறுப்பினர் ஆ.சடாகோபன் சிறப்புரையை ஆற்றுவார்.

“பொங்கிக் களி(ழி)ப்போமா?” என்னும் தலைப்பில் காரைக்கவி கந்தையா பத்மானந்தன் தலைமையில் கவியரங்கு நடைபெறும்.

கவிஞர்களான நியாஸ் ஏ சமத்,  திருமதி பூர்ணிமா கருணாகரன், திருமதி சுபாஷினி பிரணவன் ,செல்வ திருச்செல்வன் ஆகியோர் பங்குபற்றுவர்.

ஆடல் நிகழ்வினை சைவ மங்கையார் வித்தியாலய மாணவிகள் நிகழ்த்தவர்.

மிடற்றிசையினை திரு. சு.பிரஜீவன்ராம் வழங்குவார்.

 குயிலுவக் கலைஞர்கள் வயலின் - .ச.திபாகரன்,  மிருதங்கம் - வை.வேனிலான்,  கஞ்சிரா,  முகவர்சிங் - இ.நிஷாத்.  கொழும்புத் தமிழ்ச் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் க.செந்தில்குமார்  நன்றியுரை வழங்குவார்என  தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தைப்பொங்கல் விழா கொழும்புத்  தமிழ்ச் சங்க தலைவர் சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் தலைமையில் 2023.01.15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு “தைப்பொங்கல் விழா”  கொழும்புத் தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. சைவ மங்கையர் வித்தியாலய மாணவிகளின் வரவேற்பு நடனத்தை தொடர்ந்து,  “உணர்வுகளின் அறுவடை உழவர் திருநாள்” எனும் தலைப்பில் கொழும்புத் தமிழ்ச் சங்க ஆயுள் உறுப்பினர் ஆ.சடாகோபன் சிறப்புரையை ஆற்றுவார். “பொங்கிக் களி(ழி)ப்போமா” என்னும் தலைப்பில் காரைக்கவி கந்தையா பத்மானந்தன் தலைமையில் கவியரங்கு நடைபெறும். கவிஞர்களான நியாஸ் ஏ சமத்,  திருமதி பூர்ணிமா கருணாகரன், திருமதி சுபாஷினி பிரணவன் ,செல்வ திருச்செல்வன் ஆகியோர் பங்குபற்றுவர். ஆடல் நிகழ்வினை சைவ மங்கையார் வித்தியாலய மாணவிகள் நிகழ்த்தவர். மிடற்றிசையினை திரு. சு.பிரஜீவன்ராம் வழங்குவார்.  குயிலுவக் கலைஞர்கள் வயலின் - .ச.திபாகரன்,  மிருதங்கம் - வை.வேனிலான்,  கஞ்சிரா,  முகவர்சிங் - இ.நிஷாத்.  கொழும்புத் தமிழ்ச் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் க.செந்தில்குமார்  நன்றியுரை வழங்குவார்என  தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement