• Jun 26 2024

நாளைய தினம் தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் விடுதலை..!!

Tamil nila / Feb 17th 2024, 7:17 pm
image

Advertisement

பாங்காக் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா நாளை(18) விடுதலை செய்யப்படுவார் என பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தெரிவித்துள்ளார். 

ஷினவத்ரா கடந்த 2001 முதல் 2006 வரை தாய்லாந்தின் பிரதமராக இருந்தார். சர்ச்சைக்குரிய அரிசி மானிய திட்டத்தின் மூலம் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய வழக்கில் தாய்லாந்து முன்னாள் பிரதமருக்கு சிறைத் தண்டனை விதித்தது.

இந்த வழக்கில் சிறைத் தண்டனையிலிருந்து தப்புவதற்காக, 15 ஆண்டுகள் வெளிநாட்டிலிருந்து கடந்தாண்டு நாடு திரும்பினார் தக்சின். பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆகஸ்ட் 2023 முதல் அவர் காவலில் வைக்கப்பட்டார்.

இந்தநிலையில் உடல்நலக் குறைவு காரணமாக பாங்காக் சிறையிலிருந்து ஆறு மாதங்கள் மருத்துவமனை காவலில் வைக்கப்பட்டார். அவரின் உடல் நலக் குறைபாடு காரணமாக எட்டு ஆண்டு சிறைத் தண்டனையை மகா வஜிரலோங்கோர்ன் மன்னர் ஓராண்டாகக் குறைத்தார்.

குறித்த இதே வேளை இந்த வாரத் தொடக்கத்தில் தக்சினுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ள நிலையில் நாளை(18) விடுவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாளைய தினம் தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் விடுதலை. பாங்காக் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாய்லாந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரா நாளை(18) விடுதலை செய்யப்படுவார் என பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தெரிவித்துள்ளார். ஷினவத்ரா கடந்த 2001 முதல் 2006 வரை தாய்லாந்தின் பிரதமராக இருந்தார். சர்ச்சைக்குரிய அரிசி மானிய திட்டத்தின் மூலம் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய வழக்கில் தாய்லாந்து முன்னாள் பிரதமருக்கு சிறைத் தண்டனை விதித்தது.இந்த வழக்கில் சிறைத் தண்டனையிலிருந்து தப்புவதற்காக, 15 ஆண்டுகள் வெளிநாட்டிலிருந்து கடந்தாண்டு நாடு திரும்பினார் தக்சின். பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆகஸ்ட் 2023 முதல் அவர் காவலில் வைக்கப்பட்டார்.இந்தநிலையில் உடல்நலக் குறைவு காரணமாக பாங்காக் சிறையிலிருந்து ஆறு மாதங்கள் மருத்துவமனை காவலில் வைக்கப்பட்டார். அவரின் உடல் நலக் குறைபாடு காரணமாக எட்டு ஆண்டு சிறைத் தண்டனையை மகா வஜிரலோங்கோர்ன் மன்னர் ஓராண்டாகக் குறைத்தார்.குறித்த இதே வேளை இந்த வாரத் தொடக்கத்தில் தக்சினுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ள நிலையில் நாளை(18) விடுவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement