• Dec 28 2024

மட்டக்களப்பில் இடம்பெற்ற 34 ஆவது தேசிய மத்தியஸ்த தின நிகழ்வு..!

Sharmi / Dec 26th 2024, 3:09 pm
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் 34 ஆவது  தேசிய  மத்தியஸ்த தின நிகழ்வு மட்டக்களப்பு  மாவட்ட செயலாளர் திருமதி. ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

முதலில் பங்கேற்பாளர்களின் பதிவுகள் நடைபெற்றது. தொடர்ந்து  சர்வமத  பிரார்த்தனை   வரவேற்பு உரை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நீதி அமைச்சின் மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் எம்.ஐ.எம் ஆஸாத் நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்.

அத்துடன் மத்தியஸ்த சபைகளின் செயற்பாட்டை மேலும் வலுவடையச் செய்யும் நோக்கில் நீதி அமைச்சின் ஆலோசனைக்கு அமைய மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் ஒவ்வொரு மாட்டங்களிலும் இந்த நிகழ்வு இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் 25 வருடங்கள் மத்தியஸ்தராக கடமையாற்றிய மத்தியஸ்தர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

காத்தான்குடி பிரதேச மத்தியஸ்த சபையின் 3 மத்தியஸ்தர்கள் பாராட்டுப் பெற்றனர்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 40  பெண் மத்தியஸ்தர்கள் உள்ள மத்திய சபையாக காத்தான்குடி பிரதேச மத்தியஸ்த சபை இருப்பதை பாராட்டி  நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.

இது தவிர பாடசாலை மட்டத்தில் மத்தியஸ்த தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் உட்பட சான்றிதழ்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நிகழ்வில் மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள்  அதன் மூலம் மேற்கொள்ளப்பட் வெற்றிச் செயற்பாடுகள் தொடர்பிலும்  அது எதிர்நேக்கும் சவால்கள் தொடர்பிலும் கருத்துரைகளும்  அனுபவப் பகிர்வுகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர் ஜீ. பிரணவன்   உட்பட   விசேட காணி மத்தியஸ்த சபை மற்றும் ஏனைய மத்திய சபைகளின்  தவிசாளர்கள், மத்தியஸ்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


மட்டக்களப்பில் இடம்பெற்ற 34 ஆவது தேசிய மத்தியஸ்த தின நிகழ்வு. மட்டக்களப்பு மாவட்டத்தில் 34 ஆவது  தேசிய  மத்தியஸ்த தின நிகழ்வு மட்டக்களப்பு  மாவட்ட செயலாளர் திருமதி. ஜஸ்ரினா யுலேக்கா முரளீதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.முதலில் பங்கேற்பாளர்களின் பதிவுகள் நடைபெற்றது. தொடர்ந்து  சர்வமத  பிரார்த்தனை   வரவேற்பு உரை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றதுடன் நீதி அமைச்சின் மாவட்ட பயிற்சி உத்தியோகத்தர் எம்.ஐ.எம் ஆஸாத் நிகழ்வுகளை நெறிப்படுத்தினார்.அத்துடன் மத்தியஸ்த சபைகளின் செயற்பாட்டை மேலும் வலுவடையச் செய்யும் நோக்கில் நீதி அமைச்சின் ஆலோசனைக்கு அமைய மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவினால் ஒவ்வொரு மாட்டங்களிலும் இந்த நிகழ்வு இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இதில் 25 வருடங்கள் மத்தியஸ்தராக கடமையாற்றிய மத்தியஸ்தர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். காத்தான்குடி பிரதேச மத்தியஸ்த சபையின் 3 மத்தியஸ்தர்கள் பாராட்டுப் பெற்றனர். மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 40  பெண் மத்தியஸ்தர்கள் உள்ள மத்திய சபையாக காத்தான்குடி பிரதேச மத்தியஸ்த சபை இருப்பதை பாராட்டி  நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.இது தவிர பாடசாலை மட்டத்தில் மத்தியஸ்த தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் உட்பட சான்றிதழ்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.மட்டக்களப்பு மாவட்டத்துக்கான நிகழ்வில் மத்தியஸ்த சபையின் செயற்பாடுகள்  அதன் மூலம் மேற்கொள்ளப்பட் வெற்றிச் செயற்பாடுகள் தொடர்பிலும்  அது எதிர்நேக்கும் சவால்கள் தொடர்பிலும் கருத்துரைகளும்  அனுபவப் பகிர்வுகளும் இடம்பெற்றன.இந்த நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர் ஜீ. பிரணவன்   உட்பட   விசேட காணி மத்தியஸ்த சபை மற்றும் ஏனைய மத்திய சபைகளின்  தவிசாளர்கள், மத்தியஸ்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement