• May 22 2024

சமூக சேவை உத்தியோகத்தருக்கான விண்ணப்பம் கோரப்பட்டு இரு வருடங்களாக பரீட்சை நடாத்தாமல் இழுத்தடிப்பு..!samugammedia

Sharmi / Jul 26th 2023, 12:49 pm
image

Advertisement

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மூலமாக சமூக சேவை உத்தியோகத்தர் தரம்iii க்கான திறந்த போட்டி பரீட்சை விண்ணப்பம் கோரப்பட்டு இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் போட்டி பரீட்சை நடாத்தவில்லை விண்ணப்பிக்கும் போதே பரீட்சை கட்டணமும் செலுத்தப்பட்டுள்ளது இது தொடர்பில் எவ்வித அறிவித்தல்களும் அறிவிக்கப்படவில்லை என பரீட்சார்த்திகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக இது தொடர்பில் விளக்கம் கோரப்பட்டுள்ள நிலையில் இதற்கான பதிலாக "நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட 2020.02.25 ஆம் திகதிய 01/2020 ஆம் இலக்க முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கை மற்றும் 2022.04.26 ஆம் திகதிய 03/2022 ஆம் இலக்க தேசிய வரவு செலவு திட்ட சுற்று நிரூபத்துக்கு அமைவாக நியமனங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் திருகோணமலை ,மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களில் சமூக சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிலவி வருவதுடன் இதனை இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். 

இது தொடர்பில் துறைசார் அதிகாரிகள் கவனம் செலுத்தி இப் போட்டிப் பரீட்சையை விரைவில் நடாத்துமாறு விண்ணப்பதாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

சமூக சேவை உத்தியோகத்தருக்கான விண்ணப்பம் கோரப்பட்டு இரு வருடங்களாக பரீட்சை நடாத்தாமல் இழுத்தடிப்பு.samugammedia கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மூலமாக சமூக சேவை உத்தியோகத்தர் தரம்iii க்கான திறந்த போட்டி பரீட்சை விண்ணப்பம் கோரப்பட்டு இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில் போட்டி பரீட்சை நடாத்தவில்லை விண்ணப்பிக்கும் போதே பரீட்சை கட்டணமும் செலுத்தப்பட்டுள்ளது இது தொடர்பில் எவ்வித அறிவித்தல்களும் அறிவிக்கப்படவில்லை என பரீட்சார்த்திகள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக இது தொடர்பில் விளக்கம் கோரப்பட்டுள்ள நிலையில் இதற்கான பதிலாக "நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட 2020.02.25 ஆம் திகதிய 01/2020 ஆம் இலக்க முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கை மற்றும் 2022.04.26 ஆம் திகதிய 03/2022 ஆம் இலக்க தேசிய வரவு செலவு திட்ட சுற்று நிரூபத்துக்கு அமைவாக நியமனங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கில் திருகோணமலை ,மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களில் சமூக சேவை உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் நிலவி வருவதுடன் இதனை இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். இது தொடர்பில் துறைசார் அதிகாரிகள் கவனம் செலுத்தி இப் போட்டிப் பரீட்சையை விரைவில் நடாத்துமாறு விண்ணப்பதாரிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement