• May 10 2024

கலால் உரிமம் வழங்குவதற்கான அடிப்படை கட்டணம் ஒரு கோடி ரூபா..!

Chithra / Jan 6th 2024, 1:27 pm
image

Advertisement

 

கலால் உரிமம் வழங்குவதற்கான அடிப்படைக் கட்டணமாக ஒரு கோடி ரூபாவைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கும்போது அடிப்படைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை தற்போதுள்ள 9.1 வீத தேசிய உற்பத்திக்கு ஏற்ப அரசாங்கத்தின் வருமானத்தை அடுத்த வருடத்தில் 12.5 வீதமாக அதிகரித்துக் கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.

2025ஆம் ஆண்டில் அதனை 15 வீதம் வரை அதிகரிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்பதுடன் அதற்கான பொருளாதார மறுசீரமைப்பு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு முன்னர் 20 வீதத்திற்கும் 80 வீதத்திற்கும் இடைப்பட்ட நிலையில் காணப்பட்ட நேரடி மற்றும் மறைமுக வரிவீதம் தற்போது 30 வீதத்திற்கும் 70 வீதத்திற்கும் இடைப்பட்டதாக வந்துள்ளதுடன் அதில் மேலும் திருத்தம் செய்வதற்கான யோசனை இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலால் உரிமம் வழங்குவதற்கான அடிப்படை கட்டணம் ஒரு கோடி ரூபா.  கலால் உரிமம் வழங்குவதற்கான அடிப்படைக் கட்டணமாக ஒரு கோடி ரூபாவைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அத்துடன் மதுக்கடைகளுக்கு உரிமம் வழங்கும்போது அடிப்படைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை தற்போதுள்ள 9.1 வீத தேசிய உற்பத்திக்கு ஏற்ப அரசாங்கத்தின் வருமானத்தை அடுத்த வருடத்தில் 12.5 வீதமாக அதிகரித்துக் கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு.2025ஆம் ஆண்டில் அதனை 15 வீதம் வரை அதிகரிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்பதுடன் அதற்கான பொருளாதார மறுசீரமைப்பு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதற்கு முன்னர் 20 வீதத்திற்கும் 80 வீதத்திற்கும் இடைப்பட்ட நிலையில் காணப்பட்ட நேரடி மற்றும் மறைமுக வரிவீதம் தற்போது 30 வீதத்திற்கும் 70 வீதத்திற்கும் இடைப்பட்டதாக வந்துள்ளதுடன் அதில் மேலும் திருத்தம் செய்வதற்கான யோசனை இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement