• May 19 2024

தேர்தலை பிற்போட்ட கறுப்பு ஆடு இன்று வெளியில் வந்துள்ளது – சபையில் சாடிய எம்.உதயகுமார்! SamugamMedia

Tamil nila / Feb 23rd 2023, 5:31 pm
image

Advertisement

தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருந்தாலும் அரசாங்கம் அதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது என்பது இன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையின் மூலம் தெட்டத்தெளிவாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.


இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.


பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற சந்தேகம் இன்றைய ரணில் விக்கிரமசிங்கவின் உரை மூலம் மக்களுக்கு தெளிவாகியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.


தேர்தலை பிற்போடும் சதித்திட்டத்தின் பின்னணியில் செயற்பட்டிருந்த கறுப்பு ஆடு யார் என்பதும் இன்று மக்களுக்கு தெளிவாகியுள்ளதாக எம்.உதயகுமார் குறிப்பிட்டுள்ளார்.


தேர்தலை நடத்தாது ஜனநாயக உரிமையை மறுக்கும் போது இலங்கை சர்வதேச ரீதியில் ஆட்டம் காணும் என்றும் எம்.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அத்துடன் ஜனநாயகத்தை பாதுகாக்கும் விடயத்தில் உள்நாட்டில் போடும் இந்த குள்ளநரித்தனமான கபட நாடகங்களை இந்த அசாங்கம்  வெளிநாட்டிலும் போட நினைத்தால் இலங்கை சர்வதேச ரீதியல் தனிமைப்படுத்தப்படும் என்றும் எம்.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தலை பிற்போட்ட கறுப்பு ஆடு இன்று வெளியில் வந்துள்ளது – சபையில் சாடிய எம்.உதயகுமார் SamugamMedia தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருந்தாலும் அரசாங்கம் அதற்கு முட்டுக்கட்டையாக உள்ளது என்பது இன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரையின் மூலம் தெட்டத்தெளிவாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற சந்தேகம் இன்றைய ரணில் விக்கிரமசிங்கவின் உரை மூலம் மக்களுக்கு தெளிவாகியுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.தேர்தலை பிற்போடும் சதித்திட்டத்தின் பின்னணியில் செயற்பட்டிருந்த கறுப்பு ஆடு யார் என்பதும் இன்று மக்களுக்கு தெளிவாகியுள்ளதாக எம்.உதயகுமார் குறிப்பிட்டுள்ளார்.தேர்தலை நடத்தாது ஜனநாயக உரிமையை மறுக்கும் போது இலங்கை சர்வதேச ரீதியில் ஆட்டம் காணும் என்றும் எம்.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அத்துடன் ஜனநாயகத்தை பாதுகாக்கும் விடயத்தில் உள்நாட்டில் போடும் இந்த குள்ளநரித்தனமான கபட நாடகங்களை இந்த அசாங்கம்  வெளிநாட்டிலும் போட நினைத்தால் இலங்கை சர்வதேச ரீதியல் தனிமைப்படுத்தப்படும் என்றும் எம்.உதயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement