• Nov 22 2024

மொட்டு மீண்டும் மலரும்...! மக்கள் மத்தியில் நாமே முன்னிலையில்....! மஹிந்த நம்பிக்கை...!

Sharmi / May 9th 2024, 8:51 am
image

பொதுஜன பெரமுனவின் வேலைத்திட்டம் தற்போது  வெற்றிகரமான முன்னெடுத்து  செல்வதாகவும் எனவே பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்குமாறும் முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்றையதினம் (08) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி தற்போது மக்கள் மத்தியில் முன்னிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் வினவியபோது, 

​​அதனைப் பார்த்து சிரிக்கத்தான் முடியும் எனவும் மஹிந்த ராஜபக்ச பதிலளித்தார்.

அதேவேளை, தற்போது பொதுஜன பெரமுனவை விட சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி என்பன குறைந்த மட்டத்தில் இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ச இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் பொதுஜன பெரமுனவின் வேலைத்திட்டம் மிகவும் வெற்றிகரமான முறையில் முன்னெடுத்துச் செல்வதாகவும், இதன் மூலம் மக்கள் நம்பிக்கையுடன் இருக்க முடியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மொட்டு மீண்டும் மலரும். மக்கள் மத்தியில் நாமே முன்னிலையில். மஹிந்த நம்பிக்கை. பொதுஜன பெரமுனவின் வேலைத்திட்டம் தற்போது  வெற்றிகரமான முன்னெடுத்து  செல்வதாகவும் எனவே பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிக்குமாறும் முன்னாள் ஜனாதிபதியும் பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.கொழும்பில் நேற்றையதினம் (08) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.தேசிய மக்கள் சக்தி தற்போது மக்கள் மத்தியில் முன்னிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் வினவியபோது, ​​அதனைப் பார்த்து சிரிக்கத்தான் முடியும் எனவும் மஹிந்த ராஜபக்ச பதிலளித்தார்.அதேவேளை, தற்போது பொதுஜன பெரமுனவை விட சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி என்பன குறைந்த மட்டத்தில் இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ச இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன் பொதுஜன பெரமுனவின் வேலைத்திட்டம் மிகவும் வெற்றிகரமான முறையில் முன்னெடுத்துச் செல்வதாகவும், இதன் மூலம் மக்கள் நம்பிக்கையுடன் இருக்க முடியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement