• Sep 20 2024

மொட்டு கட்சி என்பது வெறுமனே ராஜபக்ச குடும்பத்தினரின் ஒரு சொத்து! இரா.சாணக்கியன் சாடல்

Chithra / Aug 1st 2024, 10:47 am
image

Advertisement

 

பேச்சுவார்த்தைகளின் ஊடாக தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வை பெறுவதற்காக வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய சூழலை நாங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - கல்லடி பகுதியில் உள்ள பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் புனரமைக்கப்பட்ட ஆலயங்களுக்கு சென்று புனரமைப்பு வேலைகளை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மிக விரைவாக ஒரு ஆட்சி மாற்றம் நடைபெற இருப்பதுடன் ஜனாதிபதித் தேர்தல் நடக்க இருக்கின்றது.

எவர் ஜனாதிபதியாக வந்தாலும் இந்த மாவட்டத்தில் இருக்கும் நிலைமைகள் மாற வேண்டும்.

அதாவது தற்போது இந்த மாவட்டத்தில் இருக்கின்ற ஊழல் மோசடி செய்கின்றவர்களை அகற்றி வரும் காலங்களில் மக்கள் சுத்தமான கரங்கள் உள்ள மக்களுடன் சேர்ந்து மக்களும் தேவையை பூர்த்தி செய்யக் கூடியவர்களை நாங்கள் தெரிவு செய்ய வேண்டும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மக்களுக்கான கட்சி அல்ல சிங்கள மக்களுக்கும் இல்லை தமிழ் மக்களுக்கும் இல்லை இலங்கையில் வாழும் எவருக்கு இல்லை.

மொட்டு கட்சி என்பது வெறுமனே ராஜபக்ச குடும்பத்தினரின் ஒரு சொத்து. அதை மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழு உறுதிப்படுத்துகிறது.

அவர்களது தேவை அடுத்த கட்டம் நாமல் ராஜபக்ச என்கின்ற தங்களுடைய குடும்ப வாரிசின் உடைய அரசியல் எதிர்காலம்.

அந்த குடும்ப வாரிசினுடைய அரசியலை உறுதிப்படுத்துவதற்காக தாங்கள் பொதுஜன பெரமுன கட்சி ஒரு வேட்பாளரை களம் இறக்கப் போவதாக செய்தி வெளிவந்திருக்கின்றது. என அவர் தெரிவித்துள்ளார்.


மொட்டு கட்சி என்பது வெறுமனே ராஜபக்ச குடும்பத்தினரின் ஒரு சொத்து இரா.சாணக்கியன் சாடல்  பேச்சுவார்த்தைகளின் ஊடாக தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வை பெறுவதற்காக வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய சூழலை நாங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு - கல்லடி பகுதியில் உள்ள பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் புனரமைக்கப்பட்ட ஆலயங்களுக்கு சென்று புனரமைப்பு வேலைகளை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.மிக விரைவாக ஒரு ஆட்சி மாற்றம் நடைபெற இருப்பதுடன் ஜனாதிபதித் தேர்தல் நடக்க இருக்கின்றது.எவர் ஜனாதிபதியாக வந்தாலும் இந்த மாவட்டத்தில் இருக்கும் நிலைமைகள் மாற வேண்டும்.அதாவது தற்போது இந்த மாவட்டத்தில் இருக்கின்ற ஊழல் மோசடி செய்கின்றவர்களை அகற்றி வரும் காலங்களில் மக்கள் சுத்தமான கரங்கள் உள்ள மக்களுடன் சேர்ந்து மக்களும் தேவையை பூர்த்தி செய்யக் கூடியவர்களை நாங்கள் தெரிவு செய்ய வேண்டும்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மக்களுக்கான கட்சி அல்ல சிங்கள மக்களுக்கும் இல்லை தமிழ் மக்களுக்கும் இல்லை இலங்கையில் வாழும் எவருக்கு இல்லை.மொட்டு கட்சி என்பது வெறுமனே ராஜபக்ச குடும்பத்தினரின் ஒரு சொத்து. அதை மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழு உறுதிப்படுத்துகிறது.அவர்களது தேவை அடுத்த கட்டம் நாமல் ராஜபக்ச என்கின்ற தங்களுடைய குடும்ப வாரிசின் உடைய அரசியல் எதிர்காலம்.அந்த குடும்ப வாரிசினுடைய அரசியலை உறுதிப்படுத்துவதற்காக தாங்கள் பொதுஜன பெரமுன கட்சி ஒரு வேட்பாளரை களம் இறக்கப் போவதாக செய்தி வெளிவந்திருக்கின்றது. என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement