கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டாவளை பகுதியில் இன்றையதினம்(27) தனியார் பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின் கம்பத்தினை உடைத்துக் கொண்டு கால்வாயில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியது.
இவ்விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் எந்த வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.