• May 13 2024

இராணுவ நகரமாக மாறிய கொழும்பு நகரம்...!அரசு கொண்டு வந்துள்ள அரசாணைகள்...!அரிவரி குழந்தை எழுதிய கட்டுரை.! samugammedia

Sharmi / May 15th 2023, 2:50 pm
image

Advertisement

கொழும்பு நகரம் தற்போது இராணுவ நகரமாக மாறியுள்ளதாக மொட்டு கட்சியிலிருந்து பிரிந்து சுயாதீனமாக செயற்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பிரிஸ் விசனம் வெளியிட்டுள்ளார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு விசனம் வெளியிட்டிருந்தார்.

அத்துடன் உள்ளூர் கடனை மறுசீரமைக்க மாட்டோம் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நாட்டுக்கு உறுதிமொழி அளித்திருந்தாகவும் ஆனால் தற்போது அவர் உறுதிமொழியை மறந்து செயற்படுவதாகவும் ஜி.எல்.பிரிஸ் குற்றம்சுமத்தியுள்ளார்.

உள்ளூர் கடனை மறுசீரமைக்காமல் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க முடியாது என இந்நாட்டுக்கு வந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியிருந்தாக தெரிவித்த, ஜி.எல்.பிரிஸ் இதனால் வெளிவருகின்ற மக்களின் கருத்தை நசுக்குவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், குறிப்பிட்டார்.

இதேவேளை ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க எதிர்க்கட்சிகள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் என்றும், பொதுமக்களை ஒடுக்கும் சட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜி.எல்.பிரிஸ் குறிப்பிட்டார்.

அரசு கொண்டு வந்துள்ள அரசாணைகள், அரிவரி குழந்தை எழுதிய கட்டுரை போல் உள்ளதாக தெரிவித்த ஜி.எல்.பிரிஸ் அதில் பயனுள்ள திட்டம் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

குறிப்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் மூலத்தை அரசாங்கம் திருடர்களைப் பிடிப்பதற்காக கொண்டுவரவில்லை என்றும் மாறாக திருடர்களைப் பாதுகாப்பதற்காகவே கொண்டு வருவதாக ஜி.எல்.பிரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

இராணுவ நகரமாக மாறிய கொழும்பு நகரம்.அரசு கொண்டு வந்துள்ள அரசாணைகள்.அரிவரி குழந்தை எழுதிய கட்டுரை. samugammedia கொழும்பு நகரம் தற்போது இராணுவ நகரமாக மாறியுள்ளதாக மொட்டு கட்சியிலிருந்து பிரிந்து சுயாதீனமாக செயற்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பிரிஸ் விசனம் வெளியிட்டுள்ளார்.இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு விசனம் வெளியிட்டிருந்தார்.அத்துடன் உள்ளூர் கடனை மறுசீரமைக்க மாட்டோம் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நாட்டுக்கு உறுதிமொழி அளித்திருந்தாகவும் ஆனால் தற்போது அவர் உறுதிமொழியை மறந்து செயற்படுவதாகவும் ஜி.எல்.பிரிஸ் குற்றம்சுமத்தியுள்ளார்.உள்ளூர் கடனை மறுசீரமைக்காமல் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க முடியாது என இந்நாட்டுக்கு வந்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியிருந்தாக தெரிவித்த, ஜி.எல்.பிரிஸ் இதனால் வெளிவருகின்ற மக்களின் கருத்தை நசுக்குவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், குறிப்பிட்டார்.இதேவேளை ஊடக சுதந்திரத்தைப் பாதுகாக்க எதிர்க்கட்சிகள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யும் என்றும், பொதுமக்களை ஒடுக்கும் சட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜி.எல்.பிரிஸ் குறிப்பிட்டார்.அரசு கொண்டு வந்துள்ள அரசாணைகள், அரிவரி குழந்தை எழுதிய கட்டுரை போல் உள்ளதாக தெரிவித்த ஜி.எல்.பிரிஸ் அதில் பயனுள்ள திட்டம் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.குறிப்பாக ஊழல் தடுப்புச் சட்டத்தின் மூலத்தை அரசாங்கம் திருடர்களைப் பிடிப்பதற்காக கொண்டுவரவில்லை என்றும் மாறாக திருடர்களைப் பாதுகாப்பதற்காகவே கொண்டு வருவதாக ஜி.எல்.பிரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement