• May 17 2024

பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து..! சுகாதார அமைச்சு அதிர்ச்சி தகவல் samugammedia

Chithra / Jun 11th 2023, 9:21 am
image

Advertisement

நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களில் இருபத்தைந்து சதவீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, டெங்கு நுளம்பு பரவுவதை தடுக்கும் வகையில், பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டதுடன், இன்றும் முன்னெடுக்கப்படுகிறது.

நாளைய தினம் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 42,184 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அத்துடன் 61 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள் டெங்கு அபாயப் பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து. சுகாதார அமைச்சு அதிர்ச்சி தகவல் samugammedia நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களில் இருபத்தைந்து சதவீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதன்படி, டெங்கு நுளம்பு பரவுவதை தடுக்கும் வகையில், பாடசாலை வளாகங்களை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டதுடன், இன்றும் முன்னெடுக்கப்படுகிறது.நாளைய தினம் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 42,184 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.அத்துடன் 61 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள் டெங்கு அபாயப் பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement