• May 09 2024

இராணுவ சிப்பாயினால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து..! samugammedia

Chithra / Sep 29th 2023, 9:17 am
image

Advertisement

 

வாதுவ பிரதேசத்தில் மசாஜ் சென்டர்கள், பேஸ்புக் மற்றும் இணையம் மூலம் அடையாளம் காணப்பட்ட பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து தங்க நகைகளை கொள்ளையடித்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

பண்டாரகம, மில்லனிய பிரதேசத்தை சேர்ந்த 53 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொட்டாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மசாஜ் நிலையங்கள், பேஸ்புக் மற்றும் இணையத்தளங்களில் இருந்து அடையாளம் காணப்பட்ட பெண்களை வாதுவ, மொரொன்துடுவ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பொலிஸ் தலைமையகத்தில் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகராக இருப்பதாக போலியான அடையாள அட்டையை காட்டி பெண்களின் தங்க நகைகளை சந்தேக நபர் திருடியதும் தெரியவந்துள்ளது.

 சந்தேகநபரால் களவாடப்பட்ட தங்க நகைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபா, கையடக்கத் தொலைபேசி மற்றும் போலி பொலிஸ் அடையாள அட்டை என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இராணுவ சிப்பாயினால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து. samugammedia  வாதுவ பிரதேசத்தில் மசாஜ் சென்டர்கள், பேஸ்புக் மற்றும் இணையம் மூலம் அடையாளம் காணப்பட்ட பெண்களை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து தங்க நகைகளை கொள்ளையடித்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.பண்டாரகம, மில்லனிய பிரதேசத்தை சேர்ந்த 53 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.கொட்டாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் மசாஜ் நிலையங்கள், பேஸ்புக் மற்றும் இணையத்தளங்களில் இருந்து அடையாளம் காணப்பட்ட பெண்களை வாதுவ, மொரொன்துடுவ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.பொலிஸ் தலைமையகத்தில் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகராக இருப்பதாக போலியான அடையாள அட்டையை காட்டி பெண்களின் தங்க நகைகளை சந்தேக நபர் திருடியதும் தெரியவந்துள்ளது. சந்தேகநபரால் களவாடப்பட்ட தங்க நகைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.இதற்கு மேலதிகமாக ஒரு லட்சத்து 43 ஆயிரம் ரூபா, கையடக்கத் தொலைபேசி மற்றும் போலி பொலிஸ் அடையாள அட்டை என்பன பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement