• Sep 08 2024

இறந்து போன நபர் கண்விழித்து எழுந்தார்- தெறித்து ஓடிய பொதுமக்கள்! samugammedia

Tamil nila / Jun 2nd 2023, 7:53 am
image

Advertisement

இந்தியாவின்  மத்தியபிரதேசத்தில் இறுதிச்சடங்கில் இறந்து போன நபர் கண்விழித்து எழுந்ததால் பொதுமக்கள் தெறித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜீது பிரஜாபதி. இவர் கடந்த 30ம் தேதி திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்ததும் குடும்பத்தினர் ஓடி வந்து அவரை எழுப்ப முயற்சி செய்தனர்.

ஆனால், இவர் எழுந்திருக்கவே இல்லை. எவ்வளவு முயற்சி செய்தும் அவர் எழுந்திருக்காததால் ஜீது இறந்து விட்டதாக உறவினர்கள் நினைத்தனர். இதனையடுத்து, ஊர் மக்கள் சூழ ஜீதுக்கு இறுதிச் சடங்கு நடத்த உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். அப்போது, அன்று மாலை சுடுகாட்டில் உடல் தகனம் செய்வதற்காக மாலை போட்டு அஞ்சலி செய்த போது திடீரென்று அவர் கண்விழித்து எழுந்தார்.

மேலும் அவர் எழுந்ததைப் பார்த்ததும், ஊர்மக்களும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். சுற்றியிருந்த சிலர் இவர் எழுந்ததைப் பார்த்து பயத்தில் அங்கிருந்து தெறித்து ஓடினர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். மேலும், அந்த இடத்திற்கு வந்த போலீசார், மருத்துவர்களை அழைத்தனர். மருத்துவர்கள் வந்து ஜீதுவின் உடலை பரிசோதனை செய்தபோது அவருக்கு உயிர் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் ஜீதுவை மேல் சிகிச்சைக்காக குவாலியரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஜீதுவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.      




இறந்து போன நபர் கண்விழித்து எழுந்தார்- தெறித்து ஓடிய பொதுமக்கள் samugammedia இந்தியாவின்  மத்தியபிரதேசத்தில் இறுதிச்சடங்கில் இறந்து போன நபர் கண்விழித்து எழுந்ததால் பொதுமக்கள் தெறித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜீது பிரஜாபதி. இவர் கடந்த 30ம் தேதி திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்ததும் குடும்பத்தினர் ஓடி வந்து அவரை எழுப்ப முயற்சி செய்தனர்.ஆனால், இவர் எழுந்திருக்கவே இல்லை. எவ்வளவு முயற்சி செய்தும் அவர் எழுந்திருக்காததால் ஜீது இறந்து விட்டதாக உறவினர்கள் நினைத்தனர். இதனையடுத்து, ஊர் மக்கள் சூழ ஜீதுக்கு இறுதிச் சடங்கு நடத்த உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். அப்போது, அன்று மாலை சுடுகாட்டில் உடல் தகனம் செய்வதற்காக மாலை போட்டு அஞ்சலி செய்த போது திடீரென்று அவர் கண்விழித்து எழுந்தார்.மேலும் அவர் எழுந்ததைப் பார்த்ததும், ஊர்மக்களும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். சுற்றியிருந்த சிலர் இவர் எழுந்ததைப் பார்த்து பயத்தில் அங்கிருந்து தெறித்து ஓடினர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். மேலும், அந்த இடத்திற்கு வந்த போலீசார், மருத்துவர்களை அழைத்தனர். மருத்துவர்கள் வந்து ஜீதுவின் உடலை பரிசோதனை செய்தபோது அவருக்கு உயிர் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் ஜீதுவை மேல் சிகிச்சைக்காக குவாலியரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஜீதுவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.      

Advertisement

Advertisement

Advertisement