• May 19 2024

துருக்கி நிலநடுக்கத்தில் மீட்புப் பணியாற்றிய நாய்கள்... விமானத்தில் இருக்கையில் அமரவைத்து கெளரவம்..!SamugamMedia

Tamil nila / Mar 7th 2023, 9:15 pm
image

Advertisement

துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தின் மீட்புப் பணியில் பணியாற்றிய மோப்ப நாய்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் விமானத்தில் முதல் கிலாஸ் இருக்கையில் அமரவைத்துப் பயணிக்க வைத்துள்ளது துருக்கி விமானம் நிறுவனம். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பலபேரின் மனங்களைக் கவர்ந்துள்ளது.


கடந்த பிப்ரவரி 6 ஆம் நாள் துருக்கி மற்றும் சிரியா இடையே சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவில் 7.5 பதிவானது. இதில் கட்டிடங்கள் இடிந்து பெரும் சேதம் ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற மீட்டு பணியில் ஏராளமானோர் மீட்கப்பட்ட நிலையில் 50,000 பேருக்கு மேல் இறந்துள்ளனர். பல ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்து தெருக்களில் தங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். கட்டிட இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கியவர்களைப் பல நாட்களாகத் தொடர்ந்து மீட்கும் பணி நடைபெற்றது.


அப்படி மீட்புப் பணியில் முக்கிய பங்கு வகுத்தது மோப்ப நாய்கள். துருக்கி மற்றும் சிரியாவிற்கு பல நாடுகள் உதவியது. அதில் சிலர் தங்களின் சிறந்த மோப்ப நாய்களையும் அளித்து உதவியுள்ளனர். மோப்ப நாய்கள் இது போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மீட்டு பணிக்கு உதவி வண்ணம் பயிற்சி அளிக்கப்பட்டவை.



அவை மூலம் கட்டிட இடிபாடுகளின் நடுவில் சிக்கியவர்களை அடையாளம் கண்டு மீட்டு எடுக்கமுடியும். அப்படி துருக்கி நிலநடுக்கத்தில் மீட்புப் பணியில் பணியாற்றி மீண்டும் வீடு திரும்பிய நாய்களை கவுரப்படுத்தும் வகையில் துருக்கி விமானம் நிறுவனம் செயல்பட்டுள்ளது.


வழக்கமாக நாய்கள் கொண்டு செல்லப்படும் கார்கோ பகுதியில் இல்லாமல், முதல் கிளாஸ் இருக்கையில் அமரவைத்துப் பயணிக்கச் செய்துள்ளனர். விமான நிறுவனத்தின் இந்த சம்பவம் பலரின் மனதைக் கவர்ந்துள்ளது.

துருக்கி நிலநடுக்கத்தில் மீட்புப் பணியாற்றிய நாய்கள். விமானத்தில் இருக்கையில் அமரவைத்து கெளரவம்.SamugamMedia துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தின் மீட்புப் பணியில் பணியாற்றிய மோப்ப நாய்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் விமானத்தில் முதல் கிலாஸ் இருக்கையில் அமரவைத்துப் பயணிக்க வைத்துள்ளது துருக்கி விமானம் நிறுவனம். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பலபேரின் மனங்களைக் கவர்ந்துள்ளது.கடந்த பிப்ரவரி 6 ஆம் நாள் துருக்கி மற்றும் சிரியா இடையே சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவில் 7.5 பதிவானது. இதில் கட்டிடங்கள் இடிந்து பெரும் சேதம் ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற மீட்டு பணியில் ஏராளமானோர் மீட்கப்பட்ட நிலையில் 50,000 பேருக்கு மேல் இறந்துள்ளனர். பல ஆயிரம் மக்கள் வீடுகளை இழந்து தெருக்களில் தங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். கட்டிட இடிபாடுகளுக்கு நடுவில் சிக்கியவர்களைப் பல நாட்களாகத் தொடர்ந்து மீட்கும் பணி நடைபெற்றது.அப்படி மீட்புப் பணியில் முக்கிய பங்கு வகுத்தது மோப்ப நாய்கள். துருக்கி மற்றும் சிரியாவிற்கு பல நாடுகள் உதவியது. அதில் சிலர் தங்களின் சிறந்த மோப்ப நாய்களையும் அளித்து உதவியுள்ளனர். மோப்ப நாய்கள் இது போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் மீட்டு பணிக்கு உதவி வண்ணம் பயிற்சி அளிக்கப்பட்டவை.அவை மூலம் கட்டிட இடிபாடுகளின் நடுவில் சிக்கியவர்களை அடையாளம் கண்டு மீட்டு எடுக்கமுடியும். அப்படி துருக்கி நிலநடுக்கத்தில் மீட்புப் பணியில் பணியாற்றி மீண்டும் வீடு திரும்பிய நாய்களை கவுரப்படுத்தும் வகையில் துருக்கி விமானம் நிறுவனம் செயல்பட்டுள்ளது.வழக்கமாக நாய்கள் கொண்டு செல்லப்படும் கார்கோ பகுதியில் இல்லாமல், முதல் கிளாஸ் இருக்கையில் அமரவைத்துப் பயணிக்கச் செய்துள்ளனர். விமான நிறுவனத்தின் இந்த சம்பவம் பலரின் மனதைக் கவர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement