• May 02 2024

இந்த 3 பொருளை வெச்சு தயாரிக்கும் பானம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு எடையையும் குறைக்குமாம்..!

Chithra / Dec 27th 2022, 4:59 pm
image

Advertisement

கொரோனா பரவலுக்கு பின்னர் மக்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பராமரிப்பதிலும் அதிக அக்கறை காட்டுகிறார்கள். குறிப்பாக உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். 

அதுவும் இயற்கை வழிகளின் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புகிறார்கள். ஒருவரது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நம் வீட்டு சமையலறையில் உள்ள மசாலா பொருட்களே பெரிதும் உதவி புரியும்.

குறிப்பாக அந்த மசாலா பொருட்கள் செரிமான பிரச்சனைகள் முதல் உடல் எடை குறைப்பது வரை பல பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகின்றன. இது தவிர சருமத்தை பொலிவாக்கவும் உதவுகின்றன. அதற்கு அந்த மசாலா பொருட்களை தினசரி உணவில் சேர்க்க வேண்டும். 

அதிலும் சோம்பு, சீரகம், ஓமம் போன்ற மசாலா பொருட்களைக் கொண்டு ஒருவர் கசாயம் தயாரித்து, அவற்றை தினமும் காலையில் குடித்து வந்தால், உடல் பருமன் குறைவதோடு, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும். இப்போது இந்த கசாயத்தை எப்படி தயாரிப்பது மற்றும் அந்த ஒவ்வொரு பொருளின் நன்மைகளைப் பற்றியும் காண்போம்.

சீரகத்தின் நன்மைகள்


சீரகத்தில் கலோரிகள் மிகவும் குறைவு மற்றும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் பண்புகள் அதிகம் உள்ளன. சீரக விதைகள் ஒருவரின் செரிமான பிரச்சனைகளைப் போக்குவதில் சிறந்தது. 

மேலும் இது உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு மட்டுமின்றி, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவி புரிந்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

ஓமத்தின் நன்மைகள்


வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்தது தான் ஓமம். ஆயுர்வேதத்தில் உடல் எடையைப் பராமரிக்க ஓமம் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இது செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி எடை இழப்பிற்கு உதவுகிறது. 

இது தவிர நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுவதால், இது ஆஸ்துமா நோயாளிகளுக்கு நன்மை விளைவிக்கும்.

சோம்பின் நன்மைகள்


சோம்பு விதைகளில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் உள்ளன. இவை இந்த விதைகளை சத்தானவையாக ஆக்குகின்றன. இந்த சிறிய விதைகளில் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இது செரிமான செயல்முறையை சற்று மெதுவாக்குகிறது. 

இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கொழுப்புக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுக்களை உடைத்தெறிய உதவி புரிந்து, எடை இழப்பிற்கு உதவுகிறது. இது தவிர சோம்பில் டையூரிக் பண்புகள் உள்ளதால், இது உடலில் இருந்து நச்சுக்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

தேவையான பொருட்கள்:


* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்

* ஓமம் - 1 டேபிள் ஸ்பூன்

* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

* சுடுநீர் - 1 கப்

தயாரிக்கும் முறை மற்றும் எப்போது குடிக்க வேண்டும்?


* முதலில் சீரகம், ஓமம், சோம்பு ஆகியவற்றை ஒரு கப் சுடுநீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

* இப்படி இரவு முழுவதும் ஊற வைக்கும் போது, அந்த விதைகளில் உள்ள அதிகப்படியான சத்துக்கள் நீரால் உறிஞ்சப்படும்.

* பின் மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டி, வேண்டுமானால் சுவைக்கு சிறிது தேன் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இந்த 3 பொருளை வெச்சு தயாரிக்கும் பானம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு எடையையும் குறைக்குமாம். கொரோனா பரவலுக்கு பின்னர் மக்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பராமரிப்பதிலும் அதிக அக்கறை காட்டுகிறார்கள். குறிப்பாக உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதுவும் இயற்கை வழிகளின் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்புகிறார்கள். ஒருவரது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நம் வீட்டு சமையலறையில் உள்ள மசாலா பொருட்களே பெரிதும் உதவி புரியும்.குறிப்பாக அந்த மசாலா பொருட்கள் செரிமான பிரச்சனைகள் முதல் உடல் எடை குறைப்பது வரை பல பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகின்றன. இது தவிர சருமத்தை பொலிவாக்கவும் உதவுகின்றன. அதற்கு அந்த மசாலா பொருட்களை தினசரி உணவில் சேர்க்க வேண்டும். அதிலும் சோம்பு, சீரகம், ஓமம் போன்ற மசாலா பொருட்களைக் கொண்டு ஒருவர் கசாயம் தயாரித்து, அவற்றை தினமும் காலையில் குடித்து வந்தால், உடல் பருமன் குறைவதோடு, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும். இப்போது இந்த கசாயத்தை எப்படி தயாரிப்பது மற்றும் அந்த ஒவ்வொரு பொருளின் நன்மைகளைப் பற்றியும் காண்போம்.சீரகத்தின் நன்மைகள்சீரகத்தில் கலோரிகள் மிகவும் குறைவு மற்றும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் பண்புகள் அதிகம் உள்ளன. சீரக விதைகள் ஒருவரின் செரிமான பிரச்சனைகளைப் போக்குவதில் சிறந்தது. மேலும் இது உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றுவதோடு மட்டுமின்றி, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவி புரிந்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.ஓமத்தின் நன்மைகள்வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்தது தான் ஓமம். ஆயுர்வேதத்தில் உடல் எடையைப் பராமரிக்க ஓமம் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இது செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி எடை இழப்பிற்கு உதவுகிறது. இது தவிர நுரையீரல் மற்றும் சுவாசப்பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுவதால், இது ஆஸ்துமா நோயாளிகளுக்கு நன்மை விளைவிக்கும்.சோம்பின் நன்மைகள்சோம்பு விதைகளில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் உள்ளன. இவை இந்த விதைகளை சத்தானவையாக ஆக்குகின்றன. இந்த சிறிய விதைகளில் டயட்டரி நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இது செரிமான செயல்முறையை சற்று மெதுவாக்குகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், கொழுப்புக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுக்களை உடைத்தெறிய உதவி புரிந்து, எடை இழப்பிற்கு உதவுகிறது. இது தவிர சோம்பில் டையூரிக் பண்புகள் உள்ளதால், இது உடலில் இருந்து நச்சுக்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.தேவையான பொருட்கள்:* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்* ஓமம் - 1 டேபிள் ஸ்பூன்* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்* சுடுநீர் - 1 கப்தயாரிக்கும் முறை மற்றும் எப்போது குடிக்க வேண்டும்* முதலில் சீரகம், ஓமம், சோம்பு ஆகியவற்றை ஒரு கப் சுடுநீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.* இப்படி இரவு முழுவதும் ஊற வைக்கும் போது, அந்த விதைகளில் உள்ள அதிகப்படியான சத்துக்கள் நீரால் உறிஞ்சப்படும்.* பின் மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டி, வேண்டுமானால் சுவைக்கு சிறிது தேன் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement