• May 14 2024

முட்டை இறக்குமதி மூலம் முட்டை தொழில்துறை முற்றாக வீழ்ச்சியடையும் அபாயம்!

Egg
Chithra / Jan 3rd 2023, 8:58 am
image

Advertisement

முட்டையை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பண்டாரகுறிப்பிட்டார்.

அமைச்சரவை கூட்டத்தின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முட்டையை இறக்குமதி செய்வதன் மூலம் நுகர்வோர் நன்மையடைவதுடன் நாட்டினுள் இடம்பெறும் முட்டை மாஃபியாயை நிறுத்த முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் அநுர மாரசிங்க தெரிவித்துள்ளார்.

வர்த்தகத்தைவிட நுகர்வோரே மிக முக்கியம். எனவே, முட்டை மாஃபியாவில் ஈடுபடுபவர்கள் இனியாவது சாதாரண விலைக்கு முட்டையை விற்பனை செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், முட்டை இறக்குமதி மூலம் முட்டை தொழில்துறை முற்றாக வீழ்ச்சியடையும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆர்.எம். சரத் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு முட்டை உற்பத்தியாளர்கள் தற்சமயம் ஓரளவு உற்பத்திகளை அதிகரித்து வரும் தருணத்தில் அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முட்டை இறக்குமதி மூலம் முட்டை தொழில்துறை முற்றாக வீழ்ச்சியடையும் அபாயம் முட்டையை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பண்டாரகுறிப்பிட்டார்.அமைச்சரவை கூட்டத்தின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.முட்டையை இறக்குமதி செய்வதன் மூலம் நுகர்வோர் நன்மையடைவதுடன் நாட்டினுள் இடம்பெறும் முட்டை மாஃபியாயை நிறுத்த முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் அநுர மாரசிங்க தெரிவித்துள்ளார்.வர்த்தகத்தைவிட நுகர்வோரே மிக முக்கியம். எனவே, முட்டை மாஃபியாவில் ஈடுபடுபவர்கள் இனியாவது சாதாரண விலைக்கு முட்டையை விற்பனை செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.எவ்வாறாயினும், முட்டை இறக்குமதி மூலம் முட்டை தொழில்துறை முற்றாக வீழ்ச்சியடையும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ஆர்.எம். சரத் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.உள்நாட்டு முட்டை உற்பத்தியாளர்கள் தற்சமயம் ஓரளவு உற்பத்திகளை அதிகரித்து வரும் தருணத்தில் அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement