• Sep 20 2024

கட்டுப்பணத்தை ஏற்குமாறு தேர்தல் ஆணைக்குழு அதிரடி உத்தரவு!

Chithra / Jan 11th 2023, 8:41 am
image

Advertisement

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் செலுத்தும் கட்டு பணத்தை ஏற்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வது அவர்களின் பொறுப்பாகும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்தாயக்க அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி 18 ஆம் திகதி முதல் ஜனவரி 21 ஆம் திகதி நண்பகல் வரை வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தேர்தல் அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி செயலாளர்கள் இன்று (11) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலுக்கு தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


கட்டுப்பணத்தை ஏற்குமாறு தேர்தல் ஆணைக்குழு அதிரடி உத்தரவு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் செலுத்தும் கட்டு பணத்தை ஏற்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வது அவர்களின் பொறுப்பாகும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்தாயக்க அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் குறிப்பிட்டுள்ளார்.ஜனவரி 18 ஆம் திகதி முதல் ஜனவரி 21 ஆம் திகதி நண்பகல் வரை வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தேர்தல் அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அத்துடன், 2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி செயலாளர்கள் இன்று (11) தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.இன்று காலை நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலுக்கு தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement