• Mar 29 2024

அடுத்த 30 நிமிடங்களில் மின்னஞ்சல் வரும்.. 1,300 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்த ஜூம் நிறுவனம்

Chithra / Feb 8th 2023, 8:54 am
image

Advertisement

தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான ஜூம் நிறுவனம், சுமார் 1,300 ஊழியர்களை அல்லது 15 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் என்று தலைமை நிர்வாகி எரிக் யுவான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட ஊழியர்களை "கடின உழைப்பாளி, திறமையான சக ஊழியர்கள்" என்று அழைத்த திரு யுவான், அவர்கள் அமெரிக்காவில் இருந்தால் அவர்களுக்கு மின்னஞ்சல் வரும் என்றும், உள்ளூர் தேவைகளைப் பின்பற்றி அனைத்து அமெரிக்க அல்லாத ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.

நீங்கள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட பணியாளராக இருந்தால், அடுத்த 30 நிமிடங்களில் ஜூம் நிறுவனத்தால் தனிப்பட்ட மின்னஞ்சலைப் பெறுவீர்கள் என்றும், இந்த பணி நீக்கம் குறித்து அமெரிக்கா அல்லாத ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்படும் என்றும் யுவான் கூறினார்.

கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு உலகப் பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மை மற்றும் வணிகங்களின் மந்த நிலைக்கு மத்தியில் தங்கள் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.


அடுத்த 30 நிமிடங்களில் மின்னஞ்சல் வரும். 1,300 ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்த ஜூம் நிறுவனம் தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான ஜூம் நிறுவனம், சுமார் 1,300 ஊழியர்களை அல்லது 15 சதவீத பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் என்று தலைமை நிர்வாகி எரிக் யுவான் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.பாதிக்கப்பட்ட ஊழியர்களை "கடின உழைப்பாளி, திறமையான சக ஊழியர்கள்" என்று அழைத்த திரு யுவான், அவர்கள் அமெரிக்காவில் இருந்தால் அவர்களுக்கு மின்னஞ்சல் வரும் என்றும், உள்ளூர் தேவைகளைப் பின்பற்றி அனைத்து அமெரிக்க அல்லாத ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.நீங்கள் அமெரிக்காவை தளமாகக் கொண்ட பணியாளராக இருந்தால், அடுத்த 30 நிமிடங்களில் ஜூம் நிறுவனத்தால் தனிப்பட்ட மின்னஞ்சலைப் பெறுவீர்கள் என்றும், இந்த பணி நீக்கம் குறித்து அமெரிக்கா அல்லாத ஊழியர்களுக்கும் தெரிவிக்கப்படும் என்றும் யுவான் கூறினார்.கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு உலகப் பொருளாதாரத்தின் நிச்சயமற்ற தன்மை மற்றும் வணிகங்களின் மந்த நிலைக்கு மத்தியில் தங்கள் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.

Advertisement

Advertisement

Advertisement